சமந்தாவை தொடர்ந்து காதல் கணவரை பிரியும் பிரபல நடிகை? இன்ஸ்டாவில் பெயர் நீக்கம்! ரசிகர்கள் ஷாக்!

0
சமந்தாவை தொடர்ந்து காதலரை பிரியும் பிரபல நடிகை? இன்ஸ்டாவில் பெயர் நீக்கம்! ரசிகர்கள் ஷாக்!
சமந்தாவை தொடர்ந்து காதலரை பிரியும் பிரபல நடிகை? இன்ஸ்டாவில் பெயர் நீக்கம்! ரசிகர்கள் ஷாக்!
சமந்தாவை தொடர்ந்து காதல் கணவரை பிரியும் பிரபல நடிகை? இன்ஸ்டாவில் பெயர் நீக்கம்! ரசிகர்கள் ஷாக்!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவரின் பெயரை நீக்கி இருக்கிறார். இதனால் இவருக்கும் சமந்தா போல விவாகரத்து நடைபெற இருக்கிறதா என வதந்திகள் பரவ தொடங்கி உள்ளன.

பிரியங்கா சோப்ரா:

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. அவர் 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். அவர் தமிழில் நடிகர் விஜய் உடன் இணைந்து படம் ஒன்றை நடித்திருக்கிறார். அதனால் அவரை தெரியாதவர்கள் யாருமே இல்லை என சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமான அவர், தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கூட அவரது மார்க்கெட் குறையாமல் இருந்தது.

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான தொகுப்பாளினி DD – மாப்பிள்ளை குறித்து அவர் வெளியிட்ட பதிவு!

மேலும் திருமணத்திற்கு பின்னர் கூட கவர்ச்சியாக அவர் நடித்து வந்த நிலையில், தற்போது திடீரென தன்னுடைய காதல் கணவர் பெயரை இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார். ஏற்கனவே நடிகை சமந்தா இதே போல நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கியது முதல் 3 மாதங்கள் பல வதந்திகள் கிளம்பியது. அதன் பின் கடந்த மாதம் சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து செய்ய இருப்பதாக தெரிவித்தனர். அதே போல பிரியங்காவும் தன்னுடைய கணவர் பெயரை நீக்கி உள்ளதால் வதந்திகள் கிளம்ப தொடங்கி இருக்கிறது.

திருமணத்துக்கு பின் ‘செம்பருத்தி’ சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ஷபானா – வைரலாகும் புகைப்படம்!

பிரியங்கா சோப்ரா ஏன் திடீரென கணவர் நிக் ஜோனஸ் பெயரை நீக்கினார். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்களா? என்ன பிரச்சனை? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன. பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோனஸுக்கும் விரைவில் விவாகரத்து நடைபெற உள்ளதாக பேச்சுகள் அடிபட்ட நிலையில், ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா அதிரடி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!