நாடு முழுவதும் நவ.14 பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா – விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

0
நாடு முழுவதும் நவ.14 பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா - விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
நாடு முழுவதும் நவ.14 பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா - விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
நாடு முழுவதும் நவ.14 பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா – விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

இந்தியா முழுவதும் சுமார் 190 இடங்களில் வருகிற 14ம் தேதி அன்று பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற இருக்கிறது. இதில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

PMNAM:

இந்தியாவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திட பல்வேறு வகையான திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 14ம் தேதி அன்று நாடு முழுவதும் 190 இடங்களில் பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா (PMNAM 2022) -நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க dgt.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் இதற்கு விண்ணப்பிக்க 5ம் வகுப்பு முதல் 12ம் வரை தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் அல்லது திறன் பயிற்சி சான்றிதழ் அல்லது ITI டிப்ளமோ படிப்பை முடித்தவராக இருக்கலாம். அதே போல் இதற்கு இளங்கலை பட்டம் பெற்றவர்களும், முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்கும் போது தங்களின் கல்விச்சான்றிதழை பதிவேற்றம் செய்வது அவசியமானதாகும்.

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

1. இதற்கு முதலில் dgt.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இப்போது முகப்புப் பக்கத்தில் பயிற்சி மேளா என்ற போர்ட்டலுக்கு செல்வதற்கான பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது புதிய பக்கம் திரையில் தோன்றும். இப்போது உங்களின் தகவல்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

4. அதன்பின்பு கடவுச்சொல் மற்றும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி உங்களின் கணக்கிற்குள் உள் நுழைய வேண்டும்.

5. பிறகு Apprenticeship Dashboard திறக்கும். இப்போது பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளாவிற்கு விண்ணப்பிப்பதற்கான லிங்கை பெறுவீர்கள்.

6. இந்த இணைப்பை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும் ,

7. இறுதியாக கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!