PPF திட்டத்தில் இரட்டிப்பு லாபம் – மாதம் ரூ.3,000 சேமித்தால் ரூ.9,76,370 பெறலாம்!! 

0
PPF திட்டத்தில் இரட்டிப்பு லாபம் - மாதம் ரூ.3,000 சேமித்தால் ரூ.9,76,370 பெறலாம்!! 
PPF திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 சேமித்து வந்தால் வட்டியுடன் சேர்த்து ரூ.9,76,370 பெறலாம்.
 PPF திட்டம்:

அரசாங்க திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கென ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலும் முதலீடு செய்துகொள்ளலாம்.

மேலும், திட்டம் முதிர்வடைந்த 15 ஆண்டுகளுக்கு பிறகும் திட்டத்தில் தொடர விரும்பினால் முதலீட்டு காலத்தை 5 ஆண்டுகள் வரையில் நீட்டிப்பு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 3,000 சேமித்து வந்தால் 15 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.5,40,000 சேமிப்பாக இருக்கும். ஆனால், நீங்கள் 7.1% வட்டியுடன் சேர்த்து ரூ.9,76,370 பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!