அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் காலிப்பணியிடங்கள் – பிப்ரவரி 25 நேர்முகத் தேர்வு!!

1
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் காலிப்பணியிடங்கள் - பிப்ரவரி 25 நேர்முகத் தேர்வு!!
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் காலிப்பணியிடங்கள் - பிப்ரவரி 25 நேர்முகத் தேர்வு!!
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் காலிப்பணியிடங்கள் – பிப்ரவரி 25 நேர்முகத் தேர்வு!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அஞ்சல் ஆயுட் காப்பீடு திட்டத்தில் நேரடி முகவர் பணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக தாம்பரம் அஞ்சல் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி முகவர் பணியிடங்கள்:

தாம்பரம் அஞ்சல் பிரிவு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் செயல்படும் அஞ்சல் ஆயுட் காப்பீடு திட்டத்தில் காலியாக உள்ள நேரடி முகவர் பணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் படித்த இளைஞர்களும் ஏதாவது ஒரு காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி அனுபவம் உள்ளவர்களும், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பஞ்சாயத்து துறையில் வேலைபார்த்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கலப்பு திருமண பெற்றோர்கள் விருப்பப்படி ஜாதிச் சான்றிதழ் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அறிவிப்பு!!

மேலும் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவர்களில் கல்விச் சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழுடன் வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நேரில் வர வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய தாம்பரம் அஞ்சல் பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here