தமிழகத்தில் தபால் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஜூலை 9ல் நேர்முகத்தேர்வு!

2
தமிழகத்தில் தபால் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு - ஜூலை 9ல் நேர்முகத்தேர்வு!
தமிழகத்தில் தபால் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு - ஜூலை 9ல் நேர்முகத்தேர்வு!
தமிழகத்தில் தபால் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஜூலை 9ல் நேர்முகத்தேர்வு!

தமிழகத்தில் தபால் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக தபால் ஆயுள் காப்பீடு முகவர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூலை மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தபால் அலுவலகங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வு

தபால் ஆயுள் காப்பீடு களில் முகவர் பணிக்கான புதிய ஆள் எடுப்பு பணிகள் தற்போது நடைபெற உள்ளது. அதன் படி வரும் ஜூலை 9 ஆம் தேதி அன்று இப்பணிக்கான நேர்முகத் தேர்வானது சென்னை தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்து தாம்பரம் கோட்டம், தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் டி.வி சுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடுகளுக்கான நேரடி முகவர் பணிக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது.

தமிழக அரசு கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் அறிவிப்பு!

இந்த பணிகளில் விருப்பம் உள்ளவர்கள், ஜூலை 9 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தாம்பரம் தபால் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவராக வேண்டும். மேலும் தேர்வில் கலந்து கொள்பவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகவும் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தவிர இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேலை இல்லாத படித்த இளைஞர்கள், காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஆயுள் காப்பீடு ஆலோசகர்கள், முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சங்க ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக்குழுவினர், கிராமத் தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தகுதியானவர்கள் ஆவர். இந்த நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!