Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் கணக்கு வைத்துள்ளவரா நீங்கள்? முக்கிய அறிவிப்பு!

1
Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் கணக்கு வைத்துள்ளவரா நீங்கள்? முக்கிய அறிவிப்பு!
Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் கணக்கு வைத்துள்ளவரா நீங்கள்? முக்கிய அறிவிப்பு!
Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் கணக்கு வைத்துள்ளவரா நீங்கள்? முக்கிய அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. இதன் மூலமாக அதிக லாபங்களை பெற முடியும். இதையடுத்து செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உள்ள பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டம்:

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். அதில் குறிப்பாக பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வந்தனர். அதனால் தங்களுக்கு பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்று விரும்பினர். இந்நிலையில் வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி தொகையை அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் பெற முடிகிறது. அதன் காரணமாக பொதுமக்கள் அதிகளவு முதலீடுகளை அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் செலுத்தி வருகின்றனர். இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 பொங்கல் போனஸ் – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!

இதில் உள்ள செல்வ மகள் சேமிப்பு திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இத்திட்டம் மூலமாக பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதிலும் 10 வயது நிரம்பிய குழந்தைகளுக்காக கூட இத்திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் பெற்றோர்கள் மத்தியில் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் மற்ற சேமிப்பு திட்டத்தை காட்டிலும் இந்த இத்திட்டத்தில் இணைவது மூலமாக அதிக வட்டி விகிதங்களை பெற முடிகிறது. இந்த திட்டத்திற்கு செலுத்தப்படும் மாத தொகையை தற்போது ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் செலுத்தி கொள்ளலாம்.

தற்போது எப்படி மாத தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்துவது பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. முதலாவதாக IPPB மொபைல் பேங்கிங் செயலியைத் திறந்து அதில் 4 இலக்க MPINஐ உள்ளீட்டு தங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

2. தற்போது ‘DOP சேவைகள்’ என்று உள்ளதை கிளிக் செய்ய வேண்டும். அதையடுத்து ‘சுகன்யா சம்ரித்தி கணக்கு’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இதையடுத்து SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிட வேண்டும்.

4. அதன் பின் தங்களின் வைப்புத் தொகையை உள்ளிட்டு ‘பணம்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. அடுத்ததாக மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையை உள்ளீட்டு ‘உறுதிப்படுத்து’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

6. தற்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும். இதனை உள்ளீட்டு ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது தங்களது மாத தொகை டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!