தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை பணிவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை பணிவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை பணிவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை பணிவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிவகங்கை மாவட்டத்தில் அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பணியில் நேரடி ஏஜென்ட் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சல் வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நேரடி ஏஜென்ட் பதவிக்கு ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு பள்ளிகளில் 2,774 காலிப்பணியிடங்கள் – ரூ.10,000 தொகுப்பூதியம் அடிப்படையில் பணி நியமனம்!

அந்த வகையில் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் இந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிவஞாகை மாவட்ட தபால் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 50 வயதிற்குள் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் செய்யும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகையும் உண்டு. இந்த பணிக்கு வேலை தேடுவோர், சுயதொழில் செய்வோர், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் திட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.

தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ரூ.5 ஆயிரத்திற்கு NSC / KVB பத்திரத்தை ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமர்பிக்க வேண்டும். லைசென்ஸ் முடியும் போது பத்திரம் திருப்பி தரப்படும். விண்ணப்பத்துடன் பான், ஆதார் கார்டு, கல்வி சான்று நகலுடன் சிவகங்கை அஞ்சல் கோட்டத்திற்கு பதிவு அல்லது வரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர் அலுவலகம், சிவகங்கை. இது குறித்த மேலும் விபரங்கள் அறிய 04575 245 129 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here