ஒரே மாதத்தில் 32,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு – வெளியான ஷாக் நியூஸ்!!

0
ஒரே மாதத்தில் 32,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு - வெளியான ஷாக் நியூஸ்!!
கடந்த சில மாதங்களாக ஐடி நிறுவனங்களில் ஏகப்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரே மாதத்தில் 32,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணி நீக்கம்:

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே ஐடி நிறுவனங்களில் மந்த நிலை நிலவி வருவதால் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். இது மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களாக ஊழியர்களின் பணியமர்த்தல் விகிதத்தையும் ஐடி நிறுவனங்கள் குறைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே Zoom, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில், தற்போது ஸ்னாப், ஓக்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் ஒரு மாதத்தில் மட்டுமே 32 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீரென ஒரே நேரத்தில் ஆயிரம் கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் ஏகப்பட்ட ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் மந்த நிலைக்கு செல்வதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!