வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியரின் குறைகளை தீர்க்கலாம் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

0

வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியரின் குறைகளை தீர்க்கலாம் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏதேனும் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் இருந்தால், அந்த குறைகளை வீட்டிலிருந்தபடியே நிவர்த்தி செய்வதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார்.

குறைதீர்ப்பு கூட்டம்:

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏதேனும் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் இருப்பின் அந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பு கூட்டம் வரும் மே 30ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தற்போது வெளியிட்டுள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை – அடுத்த மாதம் கிடைக்காது? காரணம் இது தான்!

அதாவது, ஓய்வூதியம் தொடர்பாக இருக்கும் குறைகளை சரியான விளக்கங்களுடன் மே 10 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் வட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மே 10 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நகல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஓய்வு பெற்ற அலுவலர்கள் அனுப்பி வைத்திருக்கும் முறையீடுகள் அனைத்தும் மே 30ஆம் தேதி நடைபெற இருக்கும் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!