சின்னத்திரை முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வரை – நடிகை பாவனி ரெட்டியின் திரைப்பயணம்!

0
சின்னத்திரை முதல் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வரை - நடிகை பாவனி ரெட்டியின் திரைப்பயணம்!
சின்னத்திரை முதல் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வரை - நடிகை பாவனி ரெட்டியின் திரைப்பயணம்!
சின்னத்திரை முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வரை – நடிகை பாவனி ரெட்டியின் திரைப்பயணம்!

டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து இப்போது ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்து வரும் நடிகை பாவனி ரெட்டியின் கடந்த கால வாழ்க்கையின் மறுபக்கம் குறித்து இப்பதிவில் காணலாம்.

நடிகை பாவனி

விஜய் டிவியில் வெளியான ‘சின்னத்தம்பி’ தொடரின் மூலம் தமிழ் ரசிர்கர்களுக்கு பரீட்சயமானவர் நடிகை பாவனி ரெட்டி. ஆந்திராவை சொந்த ஊராக கொண்ட பாவனி எதிர்ப்பாராத சந்தர்ப்பங்கள் மூலமாக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். ஆரம்ப கால கட்டங்களில் மாடலிங், சினிமா என பிசியா இருந்து வந்த பாவனி சில இறக்கங்களை சந்திக்கவே சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்த துவங்கினார். இவரை தமிழ் சின்னத்திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது விஜய் டிவியின் ‘ரெட்டைவால் குருவி’ சீரியல் தான்.

இரண்டாக உடையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்? மீனா, முல்லையிடம் ஏற்படும் மாற்றம்!

இந்த சீரியலில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுடன் ஜோடி போட்ட பாவனியை கண்ட ரசிகர்கள் இவர் யார் என்று கண்டுபிடிப்பதற்குள் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சன் டிவி பக்கம் திரும்பிய பாவனி ரெட்டி ‘ராசாத்தி’, ‘பாசமலர்’ ஆகிய தொடர்களில் இடம்பிடித்தார். மேலும் ‘பாசமலர்’ சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்திருந்த நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து பின்னர் திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணம் எதிர்பாராத சில காரணங்களால் முடிவுக்கு வந்தது.

அதாவது நடிகை பாவனி ரெட்டியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிறகு மீண்டுமாக ‘சின்னத்தம்பி’ சீரியல் மூலம் விஜய் டிவி இவருக்கு வாய்ப்பு கொடுத்தது. இந்த சீரியலில் மக்கள் விரும்பும் நாயகியாக மாறிய பாவனி ரெட்டி தற்போது ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். குறிப்பாக இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்கு முன் நடிகை பாவனி, ஆனந்த் என்பவரை மறுமணம் செய்ய இருப்பதாக சில தகவல்கள் வெளியானது.

ஆனால் இந்த திருமணம் தற்போது நிறுத்தப்பட்டதாக நடிகை பாவனி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இப்போது நடிகை பாவனி ரெட்டி, தமிழ் திரைப்பட நடிகர் சிம்புவின் சிபாரிசுவின் அடிப்படையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருவதாக சில பேச்சுகள் அடிபட்டு வருகிறது. அதாவது பாவனி காதலித்து வந்த ஆனந்த் ஜாயு என்பவர் நடிகர் சிம்புவுக்கு நெருக்கமான நண்பராம்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

அவர் மூலமாக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கபட்டதாக பேசப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் மஹத் ஆகியோர் சிம்பு செய்த சிபாரிசு பேரில் தான் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எதுவாக இருந்தாலும் நடிகை பாவனி மக்களின் மனம் கவர்ந்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மகுடம் சூட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here