இரண்டாக உடையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்? மீனா, முல்லையிடம் ஏற்படும் மாற்றம்!

0
இரண்டாக உடையும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம்? மீனா, முல்லையிடம் ஏற்படும் மாற்றம்!
இரண்டாக உடையும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம்? மீனா, முல்லையிடம் ஏற்படும் மாற்றம்!
இரண்டாக உடையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்? மீனா, முல்லையிடம் ஏற்படும் மாற்றம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சமீபகாலமாக மீனா மற்றும் முல்லை இடையே ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக இந்த கூட்டுக்குடும்பம் இரண்டாக உடைவதற்கு வாய்ப்புள்ளதாக பரவலான கருத்துக்கள் எழுந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு பெயர் போன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் தற்போது புதிய பிரச்சனைகள் உருவாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக தனத்துக்கு பிறந்திருக்கும் குழந்தையை அனைவரும் கொண்டாடி வருகையில் கயல் பாப்பாவை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என மீனாவுக்கு சிறிய மனஸ்தாபம் எழுந்துள்ளது. அதனை அதிகப்படுத்தும் விதமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ஒவ்வொரு காட்சிகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியை பார்ட்டி கொடுத்து அனுப்பி வைத்த சீரியல் குழு – ரசிகர்கள் அதிர்ச்சி!

அந்த வகையில் இன்றைய நாளுக்கான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் எபிசோடிலும் வீட்டு வேலைகளை கவனித்து கொள்ளும் மீனா சோர்வாக இருக்கிறதென்று சொல்லி விட்டு படுக்க செல்கிறார். அதனால் தனம், கயலை கவனிப்பதாக கூறி மீனாவை அனுப்பி வைக்கிறார். இப்போது தனத்தின் வீட்டில் இருக்கும் அவரது அம்மாவும், கஸ்தூரியும் மீனா மற்றும் முல்லையை பற்றி குறை கூறுகின்றனர். இப்போது தனத்தின் பையன் அழ ஆரம்பிக்க கயலை கஸ்தூரியிடம் ஒப்படைத்து விட்டு தனம் அங்கிருந்து செல்கிறார்.

தனம் சென்றது கயல் பாப்பாவை அப்படியே விட்டு விட்டு மற்ற இருவரும் கிளம்புகின்றனர். பக்கத்தில் ஒருவரும் இல்லாமல் கயல் அழுதுகொண்டிருக்க ஓடி வந்து கயலை தூக்கும் மீனாவின் முகம் லேசாக மாறுகிறது. மறுபக்கத்தில் கட்டிடம் கட்டும் இடத்தில் கதிருடன் அதிக நேரத்தை செலவிடும் முல்லையால் புதிய பிரச்சனைகள் எழுகிறது. அதாவது மூர்த்திக்கு தெரியாமல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை வாடகைக்கு விட கதிரும் முல்லையும் ஒப்புக்கொள்கின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

இதனை மூர்த்தி வேண்டாம் என மறுக்கிறார். இதனால் முல்லைக்கு முகமே வாடிப்போகிறது. இது எதுவும் தெரியாமல் தனம் மற்றும் மூர்த்தி இருவரும் கயல் பாப்பாவின் பிறந்தநாளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இப்போது மீனா மற்றும் முல்லையிடம் ஏற்படும் மாற்றங்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் பிரிந்து போவதற்கு ஏதுவாக கருதப்படுகிறது. இதற்கு உடந்தையாக கஸ்தூரி மற்றும் தனத்தின் அம்மாவின் பங்கும் இதில் இருப்பதாக தெரிகிறது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here