அஞ்சலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் – நிரப்ப வலியுறுத்தல்!

0
அஞ்சலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் - நிரப்ப வலியுறுத்தல்!
அஞ்சலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் - நிரப்ப வலியுறுத்தல்!
அஞ்சலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் – நிரப்ப வலியுறுத்தல்!

பாபநாசம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் அஞ்சலகங்களிலும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

காலிப்பணியிடங்கள்:

அஞ்சலகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றது. சங்கத் தலைவர் குணசீலன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கியமான கோரிக்கைகளும் அடங்கும்.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலங்களில் அஞ்சலக பணிக்கு ஆள்சேர்ப்பு ஏதும் நடைபெறாத காரணத்தால் அனைத்து அஞ்சலகங்களிலும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கொரோனா காலங்களிலும் அஞ்சல் ஊழியர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் அஞ்சல் ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அனைத்து அஞ்சலக அலுவலகங்களில் உள்ள மின்னணு சாதனங்களை பழுது நீக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தலைமை அஞ்சல் அலுவலர் சுமதி முன்னிலை வகித்தாா். செயலா் சரவணன் ஆண்டறிக்கையும், பொருளாளா் ஜெயசீலி வரவு – செலவு அறிக்கையையும் வாசித்தனர். மாநாட்டில் முன்னாள் அகில இந்தியத் தலைவர் ராமமூர்த்தி, தமிழ் மாநிலச் செயலா் வீரமணி, மாநிலத் தலைவர் குமார், மத்திய மண்டலச் செயலா் சசிகுமார், கோட்டச் செயலா்கள் செல்வகுமார், ரங்கநாதன், முன்னாள் கோட்டச் செயலா் பெருமாள், பாபநாசம் பஜாா் உதவி அஞ்சல் அலுவலா் வீராசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!