தல தீபாவளி கொண்டாடிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – குவியும் லைக்குகள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனுக்கு முதலில் ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் வைஷாலி தனிகா. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததை அடுத்து தனது கணவருடன் தல தீபாவளி கொண்டாடியதை இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
நடிகைக்கு தல தீபாவளி:
தமிழ் சின்னத்திரையில் பல சிறந்த சீரியல்களை நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வைஷாலி தனிகா. விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் ஜோடி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பின்னர் அவர் அந்த சீரியலில் இருந்து விலகி நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் ஜீ தமிழ் டிவியில் கோகுலத்தில் சீதை சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சரஸ்வதிக்காக சந்திரகலாவை பழிவாங்கும் கோதை – “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ! ரசிகர்கள் குஷி!
வைஷாலி தனிகா சின்னத்திரைக்கு நடிக்க வருவதற்கு முன்பே சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘கதகளி’ படத்தில் நடித்துள்ளார். மேலும் காதல் கசகுதய்யா, திரி, எங்க அம்மா ராணி, கடுகு, ராஜா மந்திரி, சர்கார், பைரவா, ரெமோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மாலை நேரம் என்ற குறும்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். சென்னையை சேர்ந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீசன் 1 சீரியல்களில் நடித்ததன் மூலம் நல்ல ரீச் கிடைத்தது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்!
தற்போது கோகுலத்தில் சீதை, மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வரும் வைஷாலி தனது நீண்ட நாள் காதலரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் தல தீபாவளியை தனது கணவருடன் இணைந்து கொண்டாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவில் அதிகமாக பாலோவர்ஸ் அவருக்கு இருப்பதால் இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.