‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா இல்லாமல் கயலுடன் பொங்கல் கொண்டாடிய தனம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா இல்லாமல் கயலுடன் பொங்கல் கொண்டாடிய தனம் - ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா இல்லாமல் கயலுடன் பொங்கல் கொண்டாடிய தனம் - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா இல்லாமல் கயலுடன் பொங்கல் கொண்டாடிய தனம் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் முன்னணி தொடராக உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் அனைவரும் மிகவும் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதில், முக்கிய கதாபாத்திரமாக வரும் தனம் மற்றும் கயல் பாப்பாவின் பொங்கல் கொண்டாட்டம் பற்றிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து வரும் விசேஷங்களில் முக்கிய புள்ளியாக இருக்கும் இரண்டு குழந்தைகள் மீனா, ஜீவாவின் கயல் பாப்பா, தனம், மூர்த்தியின் பாண்டியன். இவர்களை வைத்து பெயர் வைப்பது, மொட்டை போடுவது, பிறந்த நாள் என்று பல எபிசோடுகள் சென்று வருகிறது. இதனால் பாதி சண்டையும், பாதி ஒற்றுமையாகவும் சீரியல் சென்று வருகிறது. தற்போது சீரியலில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு தடை, முழு ஊரடங்கு அமல் – அரசு தீவிர நடவடிக்கை!

லட்சுமி அம்மா இறந்து விட்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை மீனாவின் அப்பா அவர்கள் வீட்டிற்கு அழைக்கிறார். இதனால் கண்ணன் ஐஸ்வர்யாவை தவிர மற்றவர்கள் அனைவரும் மீனாவின் அப்பா வீட்டிற்கு சென்று பொங்கல் வைக்கின்றனர். கண்ணன் மற்றும் ஐஷு இருவரும் ஐஷுவின் பாட்டி வீட்டிற்கு செல்கின்றனர். மீனாவின் வெளியில் நல்ல விதமாக பேசி வந்தாலும், உள்ளுக்குள் கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கிறார். இதனால் ஏதாவது சண்டை வந்து விடப்போகிறது என்று மீனாவின் அம்மா பயத்தில் உள்ளார்.

Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் இறுதி சுற்றிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்! ரசிகர்கள் உற்சாகம்!

கதைப்படி மீனா கதாபாத்திரம் தான் கயலின் அம்மாவாக உள்ள போதிலும், தனம் தான் அதிக அளவில் கயலை கவனித்து கொள்வார். இதற்கான காட்சிகள் சீரியலில் அடிக்கடி வரும். இந்நிலையில், மீனாவின் குழந்தை கயல் பாப்பாவை, ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள பொங்கல் பானை செட்டப்பில் வைத்து தனம் விளையாட்டு காட்டுகிறார். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அதனை கயல் பாப்பா பொங்கல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் கயல் பாப்பா பொங்கல் வாழ்த்து தெரிவிப்பது போல் உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!