தனது கணவருக்காக சமைத்து கொடுத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – வைரலாகும் வீடியோ!

0
தனது கணவருக்காக சமைத்து கொடுத்த
தனது கணவருக்காக சமைத்து கொடுத்த "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யா - வைரலாகும் வீடியோ!
தனது கணவருக்காக சமைத்து கொடுத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் வைஷாலி. அவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் தனது கணவருக்காக அவரே மீன் சமையல் செய்து கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

வைஷாலி சமையல்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. அவர் தனது காதல் கணவரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் காதலியாக நடித்திருந்தார். பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது இவர் நடித்து வருகிறார்.

தாமரை உடன் மல்லுக்கட்டிய இமான் அண்ணாச்சி, புதிய டாஸ்க் – பிக் பாஸ் கடைசி ப்ரோமோ!

அவர் இதுவரை நடித்த அனைத்து சீரியல்களிலும் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு நடித்து வருகிறார். திருமணம் முடிந்து தனது கணவருடன் தல தீபாவளி கொண்டாடிய வீடியோ என பல வீடியோவை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது கணவருடன் இணைந்து வீடியோ வெளியிட்டு வரும் அவர் தற்போது தனது கணவரை இம்ப்ரஸ் செய்ய சமையல் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

ஜீ தமிழில் அறிமுகமாக உள்ள புதிய சீரியல் – கதாநாயகியாக “விஜய் டிவி” சீரியல் நடிகை!

அதில் ஒரு ஹோட்டலில் தனது கணவருக்காக அவர் மீன் சமைத்து கொடுக்க அதை தேவ் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். அதில் என் மனைவி எனக்காக செய்து கொடுக்கிறார் என தேவ் சொல்லி இருக்கிறார். அவர் ஹோட்டலில் சமைத்தது புதிய அனுபவமாக இருக்கிறது என வைஷாலி பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் தேவ் கொடுத்து வைத்தவர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!