‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி அம்மா செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் லட்சுமி அம்மா செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்!!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் லட்சுமி அம்மா செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்!!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி அம்மா செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் லட்சுமி அம்மாவாக நடித்து வந்த நடிகை தற்போது அந்த சீரியலில் இறந்தது போல காட்சிகள் மாறியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் அந்த சீரியல் இயக்குனருடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

சின்னத்திரை ரசிகர்கள் என்றும் அதிகம் விரும்பு பார்ப்பது சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது”பாண்டியன் ஸ்டோர்ஸ்” தான். இந்த சீரியலில் யாருமே எதிர்பாராத வகையில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை வீட்டை விட்டு வெளியே மூர்த்தி துரத்தி விடுகிறார். இதனால் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வேலை பார்க்கின்றனர்.

தமிழ் மக்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை பிரபலங்கள் – கண்ணம்மா, ரோஜா முன்னிலை!

இப்படியாக இருக்க, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் நினைத்து அவரது அம்மா லட்சுமி தனது உடல் நலனை கெடுத்து கொண்டு பலவீனமாகி விடுகிறார். அதே போல் அவர் உயிர் தூக்கத்திலேயே பிரிகிறது. இதை அறியாமல் கண்ணன் வேலை விஷயமாக திருச்சி சென்று விடுகிறார். அவரது கையில் போனும் இல்லை. இதனால் லட்சுமி இறந்த செய்தியினை வீட்டினரால் அவருக்கு தெரிவிக்க முடியாமல் போய் விடுகிறது. கண்ணன் வந்து அவரது அம்மாவின் முகத்தினை இறுதியாக பார்ப்பாரா? இல்லையா? என்று ட்விஸ்டுடன் சீரியல் கதைக்களம் நகர்ந்து வருகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா மனதை புண்படுத்திய கமெண்ட்ஸ் – வருத்தத்துடன் பேட்டி!

இப்படியாக இருக்க, இந்த சீரியலில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷீலா தற்போது சீரியலில் இறந்து விடுவது போல காட்டப்படுவதால் இனி அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இறக்கும் காட்சியில் நடித்து விட்ட நடிகை ஷீலா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இயக்குனருடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!