தமிழ் மக்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை பிரபலங்கள் – கண்ணம்மா, ரோஜா முன்னிலை!

0
தமிழ் மக்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை பிரபலங்கள் - கண்ணம்மா, ரோஜா முன்னிலை!
தமிழ் மக்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை பிரபலங்கள் - கண்ணம்மா, ரோஜா முன்னிலை!
தமிழ் மக்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை பிரபலங்கள் – கண்ணம்மா, ரோஜா முன்னிலை!

தமிழ் சின்னத்திரை உலகில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நபர்களுக்கான பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் விஜய் டிவியின் பல முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சின்னத்திரை பிரபலங்கள்

சினிமா பிரபலங்களை போலவே தற்போது சின்னத்திரை நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் பெரிதளவு ஆதரவை பெற்று வருகின்றனர். குறிப்பாக சின்னத்திரை தொடர்கள் அல்லது நிகழ்ச்சிகளில் நடித்து வரும் நபர்கள் மக்களின் பேராதரவுடன் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் சந்தானம், சிவகார்த்திக்கேயன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களது ஆரம்பகால சினிமா பயணத்தை சின்னத்திரையில் இருந்து தான் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா மனதை புண்படுத்திய கமெண்ட்ஸ் – வருத்தத்துடன் பேட்டி!

அதே நேரத்தில் சினிமா பிரபலங்களுக்கு கொடுக்கப்படும் அதே அளவும் அங்கீகாரமும், ஆதரவும் எப்போதும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல்கள், நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளின் பட்டியல் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த ஓர்மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், விஜய் டிவி நட்சத்திரங்கள் தான் முதன்மை இடத்தை பிடித்துள்ளனர் என தெரிகிறது.

அதாவது முதல் 5 இடங்களை பிடித்துள்ள சீரியல் பிரபலங்களின் பட்டியலில், பாரதி கண்ணம்மா சீரியலின் ரோஷினி ஹரிப்ரியன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து ரோஜா சீரியலின் பிரியங்கா நல்காரி, பாண்டியன் ஸ்டோர்ஸின் சுஜிதா, ரோஜா சீரியலின் சிப்பு சூர்யன், சத்யா சீரியலின் ஆயிஷா ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா – விஜய் டிவி TRP ரேட்டிங்!

இதை தொடர்ந்து ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் பட்டியலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ், ஷிவாங்கி, அஷ்வின், நீயா நானா கோபிநாத், சூப்பர் சிங்கர் பிரியங்கா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இதில் முதல் 5 இடத்தில் இருக்கும் பிரபலங்கள் அனைவரும் விஜய் தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!