SBI வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் நெட் பேங்கிங் எச்சரிக்கை!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி ஆன்லைன் நெட் பேங்கிங் போன்ற சைபர் குற்றத்திலிருந்து வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான வழிகளை அறிவித்து அவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மோசடி எச்சரிக்கை
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்ளுக்கு ஆன்லைன் மோசடி தொடர்பான எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பரிமாற்றத்துக்கும் கடவுச்சொல் அவசியம் என்று கூறியுள்ளது. மேலும் இணைய சேவைகளுக்கான வலுவான கடவுச்சொல்லை உருவாக்க முக்கியமான சில வழிகளையும் SBI வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் – டிகோர் அறிமுகம்!!
இது தொடர்பான ட்வீட்டில், ‘SBI நெட் பேங்கிங் சேவையில் உருவாக்கப்படும் வாடிக்கையாளர்களின் வலுவான கடவுச்சொல் அதிக அளவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. மற்றவர்களால் கண்டறிய முடியாத கடவுச்சொல்லை உருவாக்கி சைபர் குற்றத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள 8 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருங்கள்’ என குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் SBI வெளியிட்டுள்ள 8 பாதுகாப்பு வழிமுறைகளை பொருத்தளவு,
- SBI வாடிக்கையாளர்கள் கடவுச்சொல்லில் பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்து ஆகிய இரண்டின் கலவையைப் பயன்படுத்தலாம். உதாரணமாக aBjsE7uG என்று பயன்படுத்த வேண்டும்.
- ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் இரண்டையும் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக AbjsE7uG61!@ என்பதாகும்.
- போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய ஒருவர் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைப் பயன்படுத்தலாம். உதாரணமாக aBjsE7uG.
- SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பொதுவான அகராதி வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. உதாரணமாக itislocked or thisismypassword என்பதனை தவிர்க்க வேண்டும்.
- வாடிக்கையாளர்கள் qwearty அல்லது asdfg போன்ற விசைப்பலகையில் வரிசையாக இருக்கும் எழுத்துக்களை பயன்படுத்தக்கூடாது.
- SBI வாடிக்கையாளர்கள் 12345678 அல்லது abcdefg போன்ற வெளிப்படையான கடவுச்சொற்களை வைத்திருக்கக்கூடாது.
TN Job “FB
Group” Join Now
- வாடிக்கையாளர்கள் DOORBELL-DOOR8377 போன்ற எளிதாக யூகிக்க கூடிய எழுத்துக்களை பயன்படுத்தக்கூடாது.
- வாடிக்கையாளர்கள் கடவுச்சொல்லை நீண்ட காலம் உபயோகிக்க SBI அறிவுறுத்துகிறது. அதே நேரத்தில் அவரது பிறந்த தேதி மற்றும் குடும்பத்தினரின்
- பிறந்த தேதியை கடவுச்சொல்லுடன் இணைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. உதாரணமாக – ரமேஷ்@1967.
- தவிர உங்கள் கடவுச்சொல் உங்கள் கையொப்பமாகும். அவற்றை தனித்துவமாகவும் வலுவாகவும் இருக்கும்படி பாதுகாப்பாக வைக்கவும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.