தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC நிரப்பி வருகிறது. TNPSC யால் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி தேதி ஆகும். இந்த தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக TNPSC தலைவர் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து தமிழக காவல் துறையில் உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNUSRB தெரிவித்து உள்ளது.
இந்த பதவிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம், TET தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் TET தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இத்தேர்வுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு தேர்வு கால அட்டவணையில் (Annual Planner) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது, மார்ச் 2022-இல் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு அறிவிப்பு இந்த (மார்ச்) மாதம் வெளியிடப்பட்டால் தேர்வானது ஜூன்/ஜூலை 2022 இல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி TNPSC உட்பட அனைத்து போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் போட்டி தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுக்கான கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Daily current Affairs – 19
Mock Test “WhatsApp Group” Join Now