அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் விண்ணப்பம், நிலை சரிபார்ப்பு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஆன்லைனில் விண்ணப்பம், நிலை சரிபார்ப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஆன்லைனில் விண்ணப்பம், நிலை சரிபார்ப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் விண்ணப்பம், நிலை சரிபார்ப்பு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது விநியோக அமைப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டு நாட்டின் முக்கிய ஆவணமாக உள்ளது. இதனை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

ரேஷன் கார்டு:

ரேஷன் கார்டு என்பது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது விநியோக அமைப்பிலிருந்து (PDS) மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாக உள்ளது. குடியுரிமைச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெறுவதற்கான அடையாளச் சான்றாகவும் இதைப் பயன்படுத்தலாம்.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பாரத் பயோடெக் முக்கிய அறிவிப்பு!

ஆன்லைனில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, அதன் நிலையைச் சரிபார்ப்பது மற்றும் பலவற்றையும் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:
  • ரேஷன் கார்டு பெறுபவர்கள் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் வேறு எந்த மாநிலத்தின் ரேஷன் கார்டை வைத்திருக்கக்கூடாது.
  • ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க பயனர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரின் ரேஷன் கார்டின் கீழ் சேர்க்கப்படலாம்.
  • தனித்தனியாக வாழவும் சமைக்கவும் வேண்டும்.
  • விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் மற்றும் அதே மாநிலத்தில் வேறு எந்த குடும்ப அட்டையையும் வைத்திருக்கக்கூடாது.
வகைகள்:

வறுமைக் கோட்டுக்குக் கீழே (பிபிஎல்) ரேஷன் கார்டு மற்றும் பிபிஎல் அல்லாத ரேஷன் கார்டு என இரண்டு வகையான ரேஷன் கார்டுகளை அரசு வழங்குகிறது. பிபிஎஸ் ரேஷன் கார்டில் நீலம்/மஞ்சள்/பச்சை/சிவப்பு ரேஷன் கார்டுகள் உணவு, எரிபொருள் மற்றும் பிற பொருட்களுக்கான பல்வேறு மானியங்களுக்கான உரிமையைப் பொறுத்து வண்ணங்களால் பிரிக்கப்படுகின்றன. பிபிஎல் அல்லாத ரேஷன் கார்டுகள் வெள்ளை நிறத்திலும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஆன்லைனில் சரிபார்க்கும் முறை:

குறிப்பிட்ட மாநில அரசு ரேஷன் கார்டை வழங்குவதால், ரேஷன் கார்டு நிலையைச் சரிபார்க்க ஒவ்வொரு மாநிலத்திற்குமான URL மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இதற்கான URL வேறுவேறாக இருக்கும். அந்தந்த மாநிலத்தின் URL ஐ தேசிய உணவு பாதுகாப்பு போர்டல் (NFSA) வழியாக நாம் தேடி எடுக்கலாம். தமிழக ரேஷன் ரேஷன் கார்டு விவரங்களை எவ்வாறு காண்பது என்று காண்போம்.

  • NFSA போர்ட்டலில் இருந்து தமிழகத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) தகுதிப் பட்டியல் உங்கள் திரையில் தோன்றும்.
  • அதில், மாவட்டம் -> நகரம் -> நகர்ப்புறத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • கடைகளின் பட்டியல் திரையில் தோன்றும்.
  • நமது ரேஷன் கார்டில் உள்ள கடையின் எண்ணை கிளிக் செய்து, உங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களைச் சரிபார்க்கலாம்.
  • பட்டியலில் உங்கள் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தேடும் பகுதியில் சென்று Cltr+F ஐ அழுத்தி உங்கள் பெயர் அல்லது டிஜிட்டல் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும்.
ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் முறை:

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் மாநில வாரியாக மாறுபடும். ஆதார் அட்டை,கைபேசி எண், உங்கள் வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
பான் கார்டு, முந்தைய மின் கட்டணம், உங்கள் வருமான சான்றிதழ்கள், வங்கி பாஸ்புக் மற்றும் உங்கள் பாஸ்புக்கின் முதல் பக்கத்தின் நகல், உங்கள் எரிவாயு இணைப்பின் விவரங்கள் போன்ற ஆவணங்கள் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு:

ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு என்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வேறு பகுதியில் பணியாற்றும் அனைவருக்கும் அரசின் ரேஷன் பொருட்கள் கிடைக்க மத்திய அரசு எடுத்துள்ள சிறந்த முயற்சியாக உள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் இந்தியா முழுவதும் இதுவரை 32 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு சமீபத்தில் மேரா ரேஷன் செயலியை அறிமுகப்படுத்தியது. மேரா ரேஷன் செயலி தற்போது ஆண்ட்ராய்டில் மட்டுமே உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!