கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பாரத் பயோடெக் முக்கிய அறிவிப்பு!

0
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பாரத் பயோடெக் முக்கிய அறிவிப்பு!
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பாரத் பயோடெக் முக்கிய அறிவிப்பு!
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பாரத் பயோடெக் முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு அவர்களுக்கு பாராசிட்டமால் மாத்திரை வழங்கப்படுகிறது. தற்போது இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஒன்றை பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அத்துடன் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது 12 முதல் 18 வயது உள்ளவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தியவருக்கு 3 பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. ஏனெனில் தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி உள்ளிட்டவற்றை சரி செய்ய பாராசிட்டமால் வழங்கப்பட்டு வருகிறது.

1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு ஜனவரி 17 வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

ஆனால் கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்க்கு குறைந்த அளவு பக்க விளைவு ஏற்படுகிறது. இதனால் கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தியவருக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்க தேவையில்லை என்று பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கொரோனா தடுப்பூசி மையங்களில் கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தியவருக்கு பாராசிட்டமால் 500 எம்ஜி மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. இது அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – பட்டியல் வெளியீடு!

அத்துடன் கோவாக்ஸின் தடுப்பூசியை செலுத்திய 30,000 பேரிடம் ஆய்வு நடத்தி உள்ளது. இதில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்க விளைவு ஏற்பட்டு இருப்பதாகவும், அதுவும் ஓரிரு நாட்களில் மருந்துகள் ஏதும் எடுத்து கொள்ளலாமே சரியாகி விடுகிறது. அதுவும் குறிப்பாக டீன் ஏஜ் வயது உள்ளவருக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் எதுவும் தேவைப்படாது. ஏதேனும் மருந்துகள் தேவைப்பட்டால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி உட்கொள்ள வேண்டும். மேலும் கோவிஷீல்ட் போன்ற தடுப்பூசி செலுத்தினால் பொதுவாக காய்ச்சல் வரும். இதற்கு பாராசிட்டமால் மட்டும் போட்டுக் கொண்டால் போதுமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!