PNB வங்கி சார்பில் ரூ.10 லட்சம் வரை தொழிற்கடன் – பெறுவது எப்படி?

0
PNB வங்கி சார்பில் ரூ.10 லட்சம் வரை தொழிற்கடன் - பெறுவது எப்படி?
PNB வங்கி சார்பில் ரூ.10 லட்சம் வரை தொழிற்கடன் - பெறுவது எப்படி?
PNB வங்கி சார்பில் ரூ.10 லட்சம் வரை தொழிற்கடன் – பெறுவது எப்படி?

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு PNB முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதை பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

தொழில் கடன்:

இந்தியாவில் சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் சார்பில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மக்கள் அலுவலகங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழில்முனைவோர் ஆவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதை ஊக்குவிக்கும் வகையில் தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் வழங்குவதற்காக பிரதமர் முத்ரா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வருகிறது.

Jio, Airtel, Vi நிறுவனங்களின் ரூ.130க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை தொழில் கடன் வழங்குகிறது. மேலும் இந்த தொகை விவசாயம் சாராத தொழில்களான உற்பத்தி, வணிகம், சேவை தொழில்கள் போன்றவற்றுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 3 வகைகள் உள்ளது. சிஷு கடன், கிஷோர் கடன், தருண் கடன் என 3 வகைகள் உள்ளன. சரியான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வகையில் ஏதேனும் கடன் பெறலாம்.

TN Job “FB  Group” Join Now

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு அடையாள அட்டை, முகவரி சான்று, SC/ST/OBC/சிறுபான்மையினர் சான்றிதழ், நிறுவனத்தின் அடையாளச் சான்று, கடந்த 6 மாத வங்கி அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பேலன்ஸ் ஷீட், நடப்பு நிதியாண்டின் விற்பனை விவரங்கள் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து சிஷு கடன் மூலம் ரூ.50,000 வரையும், கிஷோர் கடன் மூலம் ரூ.50,000 மேல் 5 லட்சம் ரூபாய் வரையும், தருண் கடன் மூலம் 10 லட்சம் ரூபாய் வரையும் பெற்றுக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!