இரவு காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
இரவு காவலர் பணி:
தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வேலை இல்லாமல் மாத ஊதியமின்றி தவித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தொழில்கள் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. அதனால் உரிமையாளர்கள் பணியாளர்களுக்கு வேலை தர மறுக்கின்றனர்.
PNB வங்கி சார்பில் ரூ.10 லட்சம் வரை தொழிற்கடன் – பெறுவது எப்படி?
இந்த நிலையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மக்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகின்றன. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள தினக்கூலி இரவுக் காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களில் சுய விவரக் குறிப்புடன், புகைப்படம், கல்வித்தகுதி சான்றிதழ், வயது சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து 25.08.2021ம் தேதி மாலை 5:45 மணிக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், விழுப்புரம் 605 602 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.