NTRO-வில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Analyst – A பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை NTRO ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கெனமொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NTRO |
பணியின் பெயர் | Analyst – A |
பணியிடங்கள் | 35 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NTRO காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Analyst – A பணிக்கென மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Analyst – A தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NTRO வயது வரம்பு:
30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.
Analyst – A ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level- 7 (Rs.44,900/- Rs.1,42,400) அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
NTRO தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்