இனி வாட்ஸ் அப் மூலமாக உணவுகளை ஆர்டர் செய்யலாம் – ரயில்வே துறையின் அட்டகாசமான சேவை தொடக்கம்!

0
இனி வாட்ஸ் அப் மூலமாக உணவுகளை ஆர்டர் செய்யலாம் - ரயில்வே துறையின் அட்டகாசமான சேவை தொடக்கம்!
இனி வாட்ஸ் அப் மூலமாக உணவுகளை ஆர்டர் செய்யலாம் - ரயில்வே துறையின் அட்டகாசமான சேவை தொடக்கம்!
இனி வாட்ஸ் அப் மூலமாக உணவுகளை ஆர்டர் செய்யலாம் – ரயில்வே துறையின் அட்டகாசமான சேவை தொடக்கம்!

தற்போது ரயில்வே துறையின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் வாயிலாக உணவு பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்வதற்கான whatsapp எண் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

இகேட்டரிங் சேவை

நாட்டில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வகையான வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் ஆன்லைன் முறையில் உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த சேவையை www.catering.irctc.co.in மற்றும் Food on Track என்ற செயலி மூலம் பெற முடியும். மேலும் வாட்ஸ் அப் கம்யூனிகேஷன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளை 2 நிலைகளில் செயல்படுத்தி வருகிறது. இதில் வாடிக்கையாளர் தங்களுக்கு தேவையான உணவுகளை தேர்வு செய்து ரயில் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக வாடிக்கையாளருடன் நேரடியாக உரையாடுவதற்கு என வாட்ஸ் அப் எண் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழையால் சேதமான நெற்பயிர்களுக்கு ரூ. 20000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

இதில் இ-கேட்டரிங் சேவைகளின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய AI பவர் சாட்போட் அனுப்பப்படும். அத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் உணவுப் பொருட்களை முன்பதிவு செய்யும். இந்த திட்டமானது தற்போது சில ரயில்களில் இயக்கப்பட உள்ளது. அதன்படி இத்திட்டம் பயணிகளுக்கிடையே வரவேற்பை பெற்றால், அனைத்து ரயில்களிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!