தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.12,000 வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.12,000 வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.12,000 வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.12,000 வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் தற்போது 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களை கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்வதற்கான தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ளது.

கல்வி உதவித்தொகை:

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்திட்டத்தின் படி 9 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் வருடத்திற்கு ரூ.12,000 கல்வி உதவித்தொகை அளிக்கும் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, தற்போது 8ம் வகுப்பில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும், மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை https://dge1.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் 20.01.2023 வரை பெற்றுக் கொள்ளலாம்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இனி வாரத்தில் 7 நாட்களில் 24 மணி நேரமும் சேவைகள் கிடைக்கும்!!

Follow our Twitter Page for More Latest News Updates

அதன்பிறகு, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.50 உடன் சேர்த்து தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜனவரி 24ம் தேதி இறுதி நாள் ஆகும். NMMS தேர்வானது வட்டார வாரியாக தேர்வு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 25ம் தேதியான சனிக்கிழமை அன்று தேர்வுகள் நடக்க உள்ளது. தேர்வு குறித்த மேலும் அதிக விவரங்களை மாணவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!