SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இனி வாரத்தில் 7 நாட்களில் 24 மணி நேரமும் சேவைகள் கிடைக்கும்!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வங்கி தொடர்பான சேவைகளை சுலபமாகப் பெற எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கி சேவை
இந்தியாவில் செயல்படும் SBI வங்கியானது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்வசம் கொண்டுள்ளது. இந்த நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு தினமும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விடுமுறை தினத்திலும், பண்டிகை நாட்களிலும் வங்கி சேவையை பெறுவதற்கு வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிமுகம் செய்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது தொடர்பாக SBI வங்கியானது தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வாடிக்கையாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வங்கி சேவையை பெறுவதற்கு 1800 1234 மற்றும் 1800 2100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த எண்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலமாக வங்கியின் சிறப்பு வசதிகளை வாடிக்கையாளர்கள் வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பெறலாம்.
மதுரையில் Data Entry Operator பணிக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
இந்த எண்களை பயன்படுத்தி உங்களின் கணக்கு இருப்பை சரிபார்த்து கொள்ளலாம். அத்துடன் நீங்கள் கடைசியாக மேற்கொண்ட 5 பரிவர்த்தனைகளை குறித்த விவரங்களை பெறலாம். இது மட்டுமல்லாமல் உங்களின் ATM கார்டை பிளாக் செய்வது மற்றும் புதிய ATM கார்டுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். இதனை தொடர்ந்து, உங்களின் பாஸ்புக் நிலை குறித்த விவரத்தையும் நீங்கள் வீட்டில் இருந்தவாறு சரிபார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.