NMDC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Blaster Gr II (Trainee) பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு பதிவு செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NMDC |
பணியின் பெயர் | Blaster Gr II (Trainee) |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NMDC காலிப்பணியிடங்கள்:
NMDC நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Blaster Gr II (Trainee) பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NMDC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NMDC கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு மற்றும் ITI முடித்திருக்க வேண்டும்.
NMDC ஊதிய விவரம் :
Blaster Gr II (Trainee) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.35,040 வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNUHDB தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் : ரூ.85,000/-
NMDC தேர்வு செய்யப்படும் முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Written Test / Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NMDC விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, Online ல் (22.04.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification & Application Link PDF