மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? அரசு முக்கிய விளக்கம்!

0
மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? அரசு முக்கிய விளக்கம்!
மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? அரசு முக்கிய விளக்கம்!
மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? அரசு முக்கிய விளக்கம்!

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஊரடங்கு நீக்கம்

மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஹிமாச்சல பிரதேச அரசு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் இன்று (பிப்.9) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, ஜனவரி 31 ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இனி அமலில் இருக்காது.

அரசு போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்..!

இதற்கு முன்னதாக, ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட அதிக கொரோனா பாதிப்புகளை கவனத்தில் கொண்ட அரசு ஜனவரி 5ம் தேதி முதல் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்தது. மேலும் கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஜனவரி 31 முதல் இக்கட்டுப்பாடுகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை திருத்தப்பட்டது. இருப்பினும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘பாம்புபிடி மன்னன்’ வாவா சுரேஷின் வாழ்க்கையில் நடந்த திகிலூட்டும் சம்பவங்கள் – ஆச்சரிய தகவல் இதோ!

இப்போது மாநிலம் முழுவதும் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் உட்பட அனைத்து சமூக, மத, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் 50 சதவீத வரம்புக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநிலத்தில் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்றைய (பிப்.8) தரவுகளின் படி 4,812 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!