அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜன.1, 2 ஆகிய தேதிகளில் புத்தாண்டு விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜன.1, 2 ஆகிய தேதிகளில் புத்தாண்டு விடுமுறை - அரசு அறிவிப்பு!
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜன.1, 2 ஆகிய தேதிகளில் புத்தாண்டு விடுமுறை - அரசு அறிவிப்பு!
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜன.1, 2 ஆகிய தேதிகளில் புத்தாண்டு விடுமுறை – அரசு அறிவிப்பு!

வருகின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜன.1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்துள்ள UAE அரசாங்கம் ஜன.3 முதல் வேலை நாளை துவங்குவதாக அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவிப்பு

வரவிருக்கும் 2022ம் ஆண்டிற்காக ஆயத்தமாகி கொண்டிருக்கும் வேளையில், ஒவ்வொரு நாட்டு அரசும் தங்களது வருடாந்திர விடுமுறை கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த டிச.18ம் தேதியன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசு 2022ம் ஆண்டிற்குரிய பொது விடுமுறை நாட்களின் பட்டியலை அறிவித்தது. இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி, ஜனவரி 1, 2022 புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து ஜனவரி 3 முதல் அலுவலகங்களுக்கான வேலை மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு – மத்திய அமைச்சர் மசோதா தாக்கல்!

முன்னதாக புத்தாண்டைக் குறிக்கும் வகையில் அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் ஜன.1ம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் டிச.19 அன்று அறிவித்தது. இது தவிர உத்தியோகபூர்வ விடுமுறைகள் தொடர்பான ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையின் முடிவின்படி, ஜனவரி 1 சனிக்கிழமையன்று, புத்தாண்டின் போது அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் அதிகாரப்பூர்வ ஊதிய விடுமுறையாக இருக்கும். அந்த வகையில் ஜனவரி 1, 2022 முதல் சனி, ஞாயிறு மற்றும் வெள்ளி அரை நாள் என்ற வேலை வாரத்தை அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? அரசு விரைவில் முக்கிய முடிவு!

இதனுடன் புதிய வேலை வாரம் புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வருவதால், ஜனவரி 2 ஞாயிற்றுக்கிழமை அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ‘ஒவ்வொரு நிறுவனமும், தாங்கள் செயல்படும் துறையைப் பொறுத்து, அவர்களின் வணிகத்திற்கு எது பொருத்தமானது என்பதைப் கொண்டு ஊழியர்களுக்கு வார இறுதியைத் தேர்வு செய்யலாம்’ என்று மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சர் அப்துல்ரஹ்மான் அல் குறிப்பிட்டுள்ளார். இப்போது 2022 ஆம் ஆண்டு பொது மற்றும் தனியார் துறைகளுக்கான விடுமுறை நாட்களின் முழுப் பட்டியலை UAE சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன் கீழ்,

  • ஜனவரி 1: புத்தாண்டு தினம்
  • ஜனவரி 2: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வார இறுதி மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ விடுமுறை
  • ஏப்ரல் 30 முதல் மே 4 வரை: ஈத் அல் பித்ர்
  • ஜூலை 8: அராபத் தினம்
  • ஜூலை 30: இஸ்லாமிய புத்தாண்டு
  • அக்டோபர் 8: முகமது நபியின் பிறந்த நாள்
  • டிசம்பர் 1: நினைவு தினம்
  • டிசம்பர் 2 மற்றும் 3: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தினம்

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!