TNPSC குரூப் 4 VAO 5000 காலிப்பணியிடங்கள் – புதிய பாடத்திட்டம்! தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!

0
TNPSC குரூப் 4 VAO 5000 காலிப்பணியிடங்கள் - புதிய பாடத்திட்டம்! தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் 4 VAO 5000 காலிப்பணியிடங்கள் - புதிய பாடத்திட்டம்! தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் 4 VAO 5000 காலிப்பணியிடங்கள் – புதிய பாடத்திட்டம்! தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று TNPSC தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 தேர்வு:

தமிழகத்தில் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் மூலமாக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பருவத்தேர்வு முடிவுகள்! அதிகாரி தகவல்!

அதன்படி அண்மையில் குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு பற்றி தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி வருகிற மே மாதம் 21ம் தேதி அன்று குரூப் 2 தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போட்டி தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வைக்கும் கருவூல அறைகளை TNPSCயின் தலைவர் பாலசந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு குறித்து TNPSCயின் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, தேர்வு அட்டவணையில் அறிவித்தபடி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கட்டாயமாக இம்மாதம் வெளியாகும் என்று உறுதி அளித்துள்ளார். அத்துடன் குரூப் 4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத்திட்டம் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிற அரசு மற்றும் பல்கலைக்கழக தேர்வு நடைபெறும் நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் குரூப் 4 தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. குரூப் 4 பணியிடத்தில் 5000 காலிப்பணியிடங்கள் கணக்கிடபட்டுள்ள நிலையில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் குரூப் 4 VAO தேர்வு தொடர்பான அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!