SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்புகள் – பதவி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!

0
BI வங்கியில் புதிய வேலைவாய்ப்புகள் - பதவி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!
BI வங்கியில் புதிய வேலைவாய்ப்புகள் - பதவி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!
SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்புகள் – பதவி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக இருக்கும் சுமார் 15 பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 13ம் தேதி வரை வரவேற்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு

கொரோனா 2ம் அலை தொற்றுக்கு பின்பாக இந்தியாவில் வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகளில் முன்னணி இடத்தை வகித்திருப்பது தொழில்துறை மற்றும் வங்கித்துறை நிறுவனங்கள் தான். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, தனது நிறுவனத்தில் காலியாக இருக்கும் சில பணியிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? கல்வித்துறை விளக்கம்!

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (sbi.co.in) வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வழக்கமான அடிப்படையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் சிறப்புப் பணியாளர்கள் பிரிவின் ஆட்சேர்ப்புக்காக இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இப்போது இப்பணிக்கான விளக்கம், ஊதியம், விண்ணப்பமுறை குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 15
பதவி:
  • தலைமை மேலாளர் (நிறுவன செயலாளர்) – 02
  • மேலாளர் (SME தயாரிப்புகள்) – 06
  • Dy. மேலாளர் (பட்டய கணக்காளர்) – 07
வயது வரம்பு:
  • தலைமை மேலாளர் – ஜூலை 1, 2021 அன்று அதிகபட்சம் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • மேலாளர் – ஆகஸ்ட் 1, 2021 அன்று அதிகபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
  • Dy. மேலாளர் – அக்டோபர் 1, 2021 அன்று குறைந்தபட்சம் 25 மற்றும் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய விகிதம்:
  • தலைமை மேலாளர் – ரூ. 76010-2220/4-84890-2500/2-89890
  • மேலாளர் – ரூ 63840-1990/5-73790-2220/2-78230
  • Dy. மேலாளர் – ரூ 48170-1740/1-49910-1990/10-69810
விண்ணப்ப முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/careers மூலம் ஜனவரி 13ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!