தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இம்மாதம் (ஆகஸ்ட்) முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள்
தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள், ரேஷன் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் வழியாகவே மக்களை சென்று சேருகிறது. இவ்வகை ரேஷன் கடைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வரும் சூழலில் தற்பொழுது துவங்கியிருக்கும் புதிய மாதத்தில் சில செயல்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே ரேஷன் அட்டைகள் அனைத்தும் ஸ்மார்ட் அட்டைகளாக தற்பொழுது பயன்பாட்டில் உள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறைகள் மீண்டுமாக செயல்படுத்தப்பட உள்ளன.
ஒரே மொபைலில் 2 Whatsapp Account பயன்படுத்துவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அதனால் கொரோனா தடுப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாதம் முதல் ரேஷன் கடைகளின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. அதன் படி ஆதார் அட்டைகளின் புதுப்பிப்பு இல்லாதவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் கை ரேகை விழாது. இக்காரணத்தால் ரேஷன் பொருட்களை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
தவிர 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். சில சமயங்களில் பயனர் ஒருவருக்கு கை ரேகை விழாத பட்சத்தில் 10 நிமிடங்கள் கழித்து தான் மீண்டும் முயற்சி செய்ய முடியும். அதுவரை பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கை ரேகை பதியப்பட்ட பின்னர் தான் பில் வழங்கப்படும்.குறிப்பாக ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், முகக்கவசம் அணிந்து வராதவர்களுக்கும் பொருட்கள் கொடுக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் பொருட்கள் வழங்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு பலகையில் கொடுக்கப்பட்டிருப்பதால், பயனர்கள் எவ்வித சிரமமும் இன்றி பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் அம்மாத இறுதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கை ரேகையை சரியாக பதிவு செய்ய முடியாதவர்கள் ஆதார் மையங்களுக்கு சென்று தகவல்களை புதுப்பித்துக்கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது. இந்த அனைத்து வழிமுறைகளும் இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது.