அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் புதிய செயலி!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் புதிய செயலி!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி!

மத்திய அரசு அறிமுகப்டுத்தியில்லா ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள மேரா ரேஷன் ஆப் குறித்து பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய செயலியின் பதிவிறக்கம், பயன்பாடு மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேரா ரேஷன் ஆப்:

நாடு முழுவதும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, PDS நன்மைகளைப் பெறுவதில் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் மாதாந்திர ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு விரையும் மத்திய குழு – ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கை!

இந்த ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் ஒரு பகுதியை இந்த திட்டத்தின் பயன்களை மக்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும், அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் மேரா ரேஷன் என்ற செயலி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. இதன் மூலம் பயனாளிகள் நாடு முழுவதும் ரேஷன் கார்டு சேவைகளைப் பெறுவார்கள். உங்கள் மொபைலில் Google Play Store பகுதிக்கு சென்று அங்கு மேரா ரேஷன் ஆப் என்பதை தேடி மத்திய Aepds குழு செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆரம்பத்தில், இந்த செயலியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது 10 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன

மேரா ரேஷன் செயலியின் அம்சங்கள்:

  • பயனர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை செயலியில் சமர்பிப்பதன் மூலம் தங்களை செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.
  • பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் பதிவு செய்து அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • இந்த செயலியின் மூலம் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களின் பட்டியலை பயனர்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் மாதந்திர பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரர் மாதம் எவ்வளவு பொருட்கள் பெற தகுதியானவர்கள் என்பதை சரி பார்க்கலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் பதிவும் செய்து கொள்ளலாம்.
  • பயனாளி தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் வழங்கப்படும் தங்களுக்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய மதிப்பையும் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!