மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மாறப்போகும் ஐஸ்வர்யா – கடுப்பான ரசிகர்கள்!

0
மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மாறப்போகும் ஐஸ்வர்யா - கடுப்பான ரசிகர்கள்!
மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மாறப்போகும் ஐஸ்வர்யா - கடுப்பான ரசிகர்கள்!
மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மாறப்போகும் ஐஸ்வர்யா – கடுப்பான ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா சில மாதங்களுக்கு முன்பு விலகினார். இவருக்கு பதிலாக சாய் காயத்ரி நடித்துவந்தார். தற்போது மீண்டும் சாய் காயத்ரி விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டு குடும்பத்தில் நடைபெறும் சண்டை சச்சரவுகள் மற்றும் பாசப் போராட்டங்களை இந்த தொடர் அப்படியே மக்களுக்கு படம் போட்டு காட்டி கொண்டிருக்கிறது. முல்லையால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என மருத்துவர் கூறியது கதிரின் மனதை நெருடிக் கொண்டிருந்தது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகா வீட்டில் தங்கும் கோபி!

இந்நிலையில் மீனாவின் அப்பாவான ஜனார்த்தனனுக்கு திடீரென நெஞ்சுவலி வந்து விடுகிறது. இரண்டு மாதம் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் கூறிவிடுகிறார். ஏற்கனவே ஐஸ்வர்யாவிற்கு சூப்பர்மார்கெட்டில் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் பாண்டியன் சூப்பர் சூப்பர்மார்க்கெட்டை ஐஸ்வர்யா தான் கவனித்து கொள்கிறார். இதுமட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ஐஸ்வர்யா கவனித்து கொள்கிறார். இதனால் குடும்பத்தினர்கள் அனைவரும் ஐஸ்வர்யாவை புகழ ஆரம்பித்துவிட்டனர். ஐஸ்வர்யாவை புகழ்வது மீனாவிற்கு பிடிக்கவில்லை. அவ்வப்போது ஐஸ்வர்யாவுடன் மீனா சண்டையிட்டு கொண்டே இருந்து வருகிறார்.

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலை முந்திய ‘பாக்கியலட்சுமி’ – ட்விஸ்ட் கொடுத்த TRP ரேட்டிங்!

இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் சாய் காயத்ரி சீரியலில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்தார். முகப்பரு பிரச்சனையின் காரணமாக தீபிகா சீரியலில் இருந்து விலகினார். தீபிகா மற்றும் கண்ணன் ஜோடியை மக்கள் அதிகம் விரும்பி வந்தனர். அதற்கு பிறகு வந்த சாய் காயத்ரியையும் சில நாட்களில் மக்கள் ஏற்றுக்கொண்டனர். தற்போது மீண்டும் சாய் காயத்ரியும் விலக போவதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!