தமிழக விமான நிலையத்திற்கு இடம் கொடுத்தால் அரசு வேலை? வெளியான முக்கிய தகவல்!

0
தமிழக விமான நிலையத்திற்கு இடம் கொடுத்தால் அரசு வேலை? வெளியான முக்கிய தகவல்!
தமிழக விமான நிலையத்திற்கு இடம் கொடுத்தால் அரசு வேலை? வெளியான முக்கிய தகவல்!
தமிழக விமான நிலையத்திற்கு இடம் கொடுத்தால் அரசு வேலை? வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் பரந்தூரில் புதிதாக விமான நிலையம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் இப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.

விமான நிலையம்

தமிழகத்தில் சென்னையில் இருந்து 65 கி.மீ. தொலைவில், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி 4 கி.மீ. தூரத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் புதிய விமான நிலையம் அமைக்க படாளம், பன்னூர், திருப்போரூர், பரந்தூர் உள்ளிட்ட இடங்களை அரசு தேர்வு செய்தது. ஆனால் இதில் பரந்தூர் பகுதியில் குறைந்த அளவு குடியிருப்புகள் இருப்பதால் இப்பகுதியே விமான நிலையம் அமைக்க உகந்ததாக இருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

‘EPS 95’ திட்டத்தின் முழு பலன்கள் – EPFO அமைப்பின் உறுப்பினர்கள் கவனத்திற்கு!

மேலும் இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பது குறித்து இங்குள்ள 13 கிராம மக்களிடம் கலந்தாலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று நிலம் வேண்டும் எனவும் இந்நிலத்திற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அதன்படி இந்நிலத்தை வருவாய் துறையினர் நில மதிப்பீட்டை ஒப்பீட்டு பார்த்து இங்குள்ள சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு கூடுதலாக பணம் தரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விமான நிலையம் அமையும் சுற்றுவட்டாரத்தில் இவர்களுக்கான மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடம் கைப்பற்றப்பட்ட இடத்திற்கான பணத்தையும் அத்துடன் அவர்கள் மாற்று இடத்தில் வீடு கட்டுவதற்கு பணத்தையும் தர உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இப்பகுதி மக்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு சார்பாக வேலை வழங்கப்படும். மேலும் இப்பகுதியில் வசித்து கொண்டிருக்கும் கிராம மக்களை ஒரே ஊரில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!