2023: NEET PG நுழைவுத்தேர்வு – தேதியை ஒத்திவைக்க கோரிக்கை.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

0
2023: NEET PG நுழைவுத்தேர்வு - தேதியை ஒத்திவைக்க கோரிக்கை.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!
2023: NEET PG நுழைவுத்தேர்வு - தேதியை ஒத்திவைக்க கோரிக்கை.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!
2023: NEET PG நுழைவுத்தேர்வு – தேதியை ஒத்திவைக்க கோரிக்கை.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

இந்தியாவில் மருத்துவ உயர் படிப்பிற்கான முதுகலை நீட் நுழைவுத்தேர்வு மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு தேதியை ஒத்தி வைக்குமாறு மருத்துவ மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இது தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

NEET PG தேர்வு:

இந்தியாவில் உயர் மருத்துவ படிப்புகளில் சேர முதுகலை நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு மார்ச் – 5ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறைகள் 2023 ஜனவரி 7ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது.

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – வினாத்தாள் கசிவு.. குழப்பத்தில் மாணவர்கள்!

இந்த நிலையில் தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தற்போது NEET PG தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் நீட் தேர்வும் நடைபெறுவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக போதிய நேரம் இல்லாமல் உள்ளனர். மேலும் இன்டர்ன்ஷிப் மதிப்பெண்கள் வெளியாகுவதிலும் காலதாமதம் ஆகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

இதனை கருத்தில் கொண்டு NEET PG தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்.27) நடைபெற்றது. அதில் தேர்வை ஒத்திவைத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் சிரமத்திற்கு ஆளாகுவார்கள். அதனால் NEET PG தேர்வை ஒத்தி வைக்க முடியாது. திட்டமிட்டபடி மார்ச் 5 ல் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!