நீட் தேர்வு ரத்து… அனல் பறக்கும் தேர்தல் அறிக்கை வெளியீடு!

0
நீட் தேர்வு ரத்து... அனல் பறக்கும் தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வண்ணம் உள்ளன. தற்போது திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை:

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தற்போது அக்கட்சி தங்களின் முக்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவையாவன

  • அம்பேத்கர் பிறந்த நாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்
  • தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கக் கூடாது
  • ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்துவோம்

SSC CHSL வேலைவாய்ப்பு 2024 – 3712 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

  • தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தரப்படும்
  • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தவும் நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த கோரிக்கை
  • இந்திய எதிர்ப்பு தேசிய இனங்கள் கவுன்சில்
  • ஜிஎஸ்டி வரி ஒழிப்போம்
  • நீட் தேர்வு ரத்து
  • மூன்றாம் பாலினத்தவருக்கு பிரதிநிதித்துவம்
  • பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
  • பழங்குடியினருக்கு தனி பட்டா போன்ற பல்வேறு அறிக்கையை கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!