அண்ணாத்த’ படத்திற்கு நயன்தாரா பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா பெற்றுள்ள சம்பளம் குறித்து தகவல்கள் வெளி வந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உச்ச நடிகை:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். பல வருடங்கள் கழித்து தலைவரின் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. தீபாவளி நவம்பர் 4ம் தேதி வர இருக்கிறது. அன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகிறது. அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
கண்ணம்மாவாக வினுஷா நடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
சந்திரமுகி, தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது மூன்றாவதாக இவர்கள் இருவரும் ஜோடி சேர இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தலைவரின் 168 வது படம் என்பதால் ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அண்ணாத்த திரைப்படத்தில் அதிக பிரபலங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அந்தவகையில், குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா என நடிகைகள் பட்டாளம் ஒரு பக்கம் இருக்க, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு மற்றும் அபிமன்யு சிங் என மூன்று வில்லன்கள் சூப்பர் ஸ்டாருக்கு இந்த படத்தில் உள்ளனர்.
‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஹீரோயின் சுசித்ரா யார் தெரியுமா? வெளிவந்த உண்மைகள்! ரசிகர்கள் குஷி!
நடிகை நயன்தாரா தான் தேர்வு செய்யும் படங்களில் மிகவும் கவனமாக இருப்பார். அவரது கால்சீட்டுக்காக பலரும் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. தற்போது அண்ணாத்த திரைப்படத்திற்காக நடிகை நயன்தாரா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகை என்பதால் இந்த அளவிற்கு சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பள விவரம் தெரிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.