கண்ணம்மாவாக வினுஷா நடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடிகை வினுஷா நடித்து வரும் நிலையில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சீரியலின் 2ம் பாகத்தில் ஒளிபரப்பாகும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணையும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கடந்த சில எபிசோடுகள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ‘இவர்’ தானா? வெளியான லிஸ்ட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
அதாவது ஹேமா மூலமாக பாரதியும் கண்ணம்மாவும் மீண்டுமாக ஒன்றிணையும் சந்தர்ப்பங்கள் உருவாகிறது. இது சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தது. இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலகியதையடுத்து கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் டிக்டாக் பிரபலம் வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகளுடன் இணைந்த ரியோ – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த தகவல்கள் தற்போது உறுதியாக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை வினுஷா நடித்து வரும் எபிசோடுகள் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் 2ம் பாகத்தில் வெளியாக இருப்பதாக சில தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. அதாவது நடிகை வினுஷாவின் போட்டோஷூட் வீடியோக்களை எடிட் செய்து அவற்றை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் 2ம் பாகம் என சில காணொளிகள் சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.