பஞ்சாப்பில் 56 அரசுப்பள்ளிகளின் பெயர்கள் மாற்றம் – கல்வித்துறை அதிரடி!

0
பஞ்சாப்பில் 56 அரசுப்பள்ளிகளின் பெயர்கள் மாற்றம் - கல்வித்துறை அதிரடி!
பஞ்சாப்பில் 56 அரசுப்பள்ளிகளின் பெயர்கள் மாற்றம் - கல்வித்துறை அதிரடி!
பஞ்சாப்பில் 56 அரசுப்பள்ளிகளின் பெயர்கள் மாற்றம் – கல்வித்துறை அதிரடி!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி பெயர்களுடன் சாதி குறிப்பிடப்பட்டு இருந்தால் அதனை நீக்க வேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி பெயர்கள்:

வருங்காலத்தின் நம்பிக்கையான மாணவர் சமுதாயம் தங்கள் மத்தியில் எந்த வித பாகுபாடும் இல்லாமல் கல்வியை கற்க வேண்டும். இதற்காக பள்ளியில் படிக்கும் சமயங்களில் அவர்கள் மனதில் சாதி குறித்த எந்த விதமான பதிவுகளும் இல்லாமல் இருப்பதே சிறந்தது. கடந்த டிசம்பர் 1ம் தேதி அன்று பஞ்சாப் பள்ளிக் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி குறியீடுகள் நீக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

Exams Daily Mobile App Download

Post Office: ஜனவரி 1ம் தேதி முதல் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் உயர்வு – அதிரடி உத்தரவு!!

சாதி குறியீடுகள் இருப்பதால், மாணவர்கள் மீது அதன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், சில பெற்றோர்கள் சாதி குறியீட்டு பெயர் காரணமாக தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்க்க தயங்குவதாகவும் தெரிவித்தார். இதற்கான ஆணை டிசம்பர் 26ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று பஞ்சாபில் அரசு பள்ளிகளில் சாதி குறியீட்டுடன் உள்ள 56 பள்ளிகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவை அந்தந்த ஊர்களின் தலைவர் அல்லது பிரபலமானவரின் பெயரால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!