இறுதி ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய், கடந்தத் தேர்வின் மதிப்பெண்களை மதிப்பீடு செய் – UGC – க்கு DU, JNU, மும்பை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடிதம்

0

இறுதி ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய், கடந்தத் தேர்வின் மதிப்பெண்களை மதிப்பீடு செய் – UGC – க்கு DU, JNU, மும்பை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடிதம்

UGC முன்னாள் தலைவர் மற்றும் DU, MU மற்றும் JNU போன்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 27 பேர் தற்போதைய UGC தலைவருக்கு இறுதி ஆண்டுத் தேர்வுகளை ரத்துச் செய்யுமாறுக் கடிதம் எழுதியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியக் குழு, UGC புதிதாக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் செப்டம்பர் மாதம், இறுதி ஆண்டுத் தேர்வுகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்படும் விளைவுகளாகிய ஆரோக்கிய ஆபத்துப் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இறுதி ஆண்டுப் பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்யுமாறு பலக் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். இவர்களுக்கு UGC – ன் முடிவு வரவேற்கத் தக்க வகையில் இல்லை. மேலும் DU, MU மற்றும் JNU ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள், இறுதி ஆண்டுத் தேர்வை ரத்து செய்து மற்றும் கடந்தத் தேர்வின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்யுமாறு UGC தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவரான சுக்காடியோ தோரட் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 27 ஆசிரியர்கள் UGC – ன் தற்போதைய தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் இறுதி ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்து, கடந்தத் தேர்வின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இக்கடிதம் ஜூலை 9, 2020, வியாழன் அன்று UGC தலைவரான D P சிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் டெல்லி பல்கலைக்கழகம், JNU, மும்பை பல்கலைக்கழகம், MU, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் ஆகியவற்றைச் சேர்ந்தப் பேராசிரியர்கள் மற்றும் பலர் கையொப்பம்மிட்டுள்ளனர்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டவை யாதெனில், “ UGC – ன் தேர்வுகள் தொடர்பானப் புதிய வழிகாட்டுதல்கள் ஏற்புடையதாக அல்ல; ஏனெனில், இவை நம்மை முன்னுக்குக் கொண்டுச் செல்வதற்கு மாறாகப் பின்னுக்குக் கொண்டுச் செல்லும். இவை தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்களிடையேக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.”

அக்கடிதத்தில், இந்த சுகாதார அவசரநிலை சந்தேகத்திற்கு உரியது அல்ல என்றும், மாணவர்களுக்குத் தோற்று ஏற்பட்டால் அவர்களது வாழ்வு அழிந்துவிடும் என்றும் பேராசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், அவற்றுள் குறிப்பிடப் பட்டுள்ளனவையாவது, “ இந்த அவசர நிலையில் தேர்வுளை ரத்து செய்வதினால் இரு நன்மைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர். தேர்வு ஒத்திவைப்புத் தொடர்பான சந்தேகத் தன்மையைத் தவிர்ப்பதுடன், பக்கச்சார்பற்றத் தன்மை மற்றும் முறைக்கேடுகளைத் தவிர்க்கத் தீவிர மேற்பார்வைப் போன்றவற்றைக் கொண்டுள்ளத் தேர்வுகளின் நேர்மையைப் பாதுகாக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.” திறந்த வெளித் தேர்வு முறைகள், முழுத் தேர்வு அமைப்புடன் விளையாடுவதுப் போன்றது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!