தமிழகத் திரையரங்குகளில் திரைப்படங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு குறைவான டிக்கெட் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணம்:
தமிழகத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பொதுமக்களின் சார்பில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிரபலமான நடிகர்களின் திரைப்படத்திற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டாலும் பல்வேறு ரசிகர்கள் அதனை பொருட்படுத்தாமல் திரைப்படங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
ஆனால், தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் குறைந்த டிக்கெட் கட்டணங்களையே வசூல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கங்களுக்கு தமிழ் திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு தியேட்டர் கட்டணம் ரூ. 80 முதல் 100 வரையில் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், மீடியம் பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ரூ.120 முதல் 150 வரையிலும் மட்டுமே கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.