தமிழகத்தில் 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
தமிழகத்தில் 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழகத்தில் 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழகத்தில் 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழகத்தின் தலைநகர் சென்னை கிண்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்று முதல்வராக பதவியேற்றார். அந்நாள் முதல் தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார். அரசின் அனைத்து துறைகளிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொற்றை கட்டுப்படுத்த ஏராளமான வழிகளை கையாண்டார்.

அர்ச்சனாவை அசிங்கப்படுத்தும் சந்தியா, விவாகரத்து குழப்பத்தில் சரவணன் – இன்றைய எபிசோட்!

உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டார். நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மேகதாது அணை விவகாரம் போன்ற விவகாரங்களுக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாநில வளர்ச்சி குழுவை மறு சீரமைப்பு செய்து அனைத்து துறைகளும் வளர்ச்சியை நோக்கிய பாதையில் பயணிக்க வழிகாட்டி வருகிறார். இதனை தொடர்ந்து தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும் ஏற்படுத்தி வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. ஏற்கனவே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து சென்னையில் கிண்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here