முக்கியமான ஒப்பந்தங்கள் – ஜனவரி 2019

0

முக்கியமான ஒப்பந்தங்கள் – ஜனவரி 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019

இங்கு ஜனவரி மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜனவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

சர்வதேச ஒப்பந்தங்கள்:

வ.எண் ஒப்பந்தம்  துறை நாட்டின் விவரங்கள் 
1 இந்தியா-நோர்வே இந்தியாவும் நோர்வேயும் கடல் பொருளாதாரத்தில் மிக நெருக்கமாக ஒத்துழைத்து, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் இந்தியா-நோர்வே பெருங்கடல் பேச்சுவார்த்தை நடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னர் – ஹரால்ட் V
பிரதமர் – எர்னா சோல்பெர்க்
தலைநகரம் – ஒஸ்லோ
நாணயம் – நோர்வேயின் குரோன்
2 இந்தியா-ஜப்பான் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை உணவுப்பதப்படுத்துதல் துறையில் இந்தியா- ஜப்பான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. உணவுப் பதப்படுத்துதல் துறையில் இருநாடுகளும் பயனடையும் வகையில், இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.  இருநாடுகளிலும் கடைபிடிக்கப்படும் சிறந்த உணவுப் பதப்படுத்துதல் முறைகள் ஊக்கப்படுத்தப்பட்டு, சந்தை அணுகுமுறையையும் மேம்படுத்தும். இதன்மூலம் புதிய தொழில்நுட்பங்களும் செயல்முறைகளும் இருநாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும். சக்கரவர்த்தி – நருஹிதோ
பிரதமர் – சின்சோ அபே
தலைநகரம் – டோக்கியோ
நாணயம் – யென்
3 இந்தியா-குவைத் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் வீட்டுவேலைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் ஒத்துழைக்க இந்தியா-குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குவைத் நாட்டில் வேலைக்கு அமர்த்தப்படும் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக் கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுள்ளது. எமீர் – சபா அகமது அல் சபா
பிரதமர் – ஜபீர் முபாரக் அல் சபா
தலைநகரம் – குவைத் நகரம்
நாணயம் – குவைத்தி தினார்
4 இந்தியா-சார்க் கூட்டமைப்பு சார்க் உறுப்பு நாடுகளுக்கு இடையே நாணய பரிமாற்ற ஏற்பாட்டுக்கான கட்டமைப்பின் திருத்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த காலத்தை உள்ளடக்கிய ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த வசதி ஒட்டுமொத்த வடிவமைப்பிற்குள் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காத்திருப்பு பரிமாற்றத்தை உள்ளடக்கியது. தலைமைச் செயலாளர் – எச். ஈ. திரு. அம்ஜத் ஹுசைன் பி. சியால்
தலைமையகம் – காத்மாண்டு, நேபாளம்
நிறுவப்பட்டது – 8 டிசம்பர் 1985
உறுப்பினர்கள் – ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை.
5 இந்தியா-ஓஇசிடி சர்வதேச மாணவர் மதிப்பீடு திட்டம் – PISA 2021 இந்தியாவின் பங்கேற்புக்கான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) உடன் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தலைமைச்செயலாளர் – ஜோஸ் ஏஞ்சல் குரியா
தலைமையகம் – பாரிஸ், பிரான்ஸ்
6 இந்தியா-சீனா இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் இந்திய புகையிலைகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான   புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சர்வதேச தரங்களுடன் ஒப்பிடும் போது தரமான புகையிலை இந்தியாவில் குறைந்த விலைகளில் கிடைக்கிறது. இதனால் சீனாவிற்கு இந்திய புகையிலை ஏற்றுமதி செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. பிரீமியர்- லீ கீகியாங்
தலைநகரம் – பெய்ஜிங்
நாணயம்-ரென்மின்பி

பிற ஒப்பந்தங்கள்/மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழ்நாட்டிற்கு 1,146 கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்

  • தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு 1146 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 ஆயுத சட்டத்தின் கீழ் உரிமம் தேவையில்லை

  • பாதுகாப்பு ஏரோஸ்பேஸ் மற்றும் போர்க்கப்பல்களின் பொருட்களை தயாரித்தல் இப்போது தொழில்துறை (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் வரும் ஆகையால் இனி வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திலிருந்து எந்தவொரு உரிமம் பெற அவசியம் இல்லை என அறிவிப்பு.

ஆதார், பிற சட்டங்கள் (சட்டதிருத்த மசோதா) 2018

  • 2018 ஆம் ஆண்டிற்கான ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (சட்டதிருத்த மசோதா) லோக் சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா

  • முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா இராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் இந்த மசோதாவை அவையில் கொண்டு வருவார்.

தேசிய சுகாதார அமைப்பின் மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • மத்திய சுகாதார அமைச்சகம், பிரதான் மந்திரி – ஜன் ஆரோக்ய யோஜனாவை மேம்படுத்துவதற்காக தேசிய சுகாதார அமைப்பை தேசிய சுகாதார ஆணையமாக மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அசாம் உடன்படிக்கையின் பிரிவு 6 அமுல்படுத்துவதற்கு குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • அசாம் உடன்படிக்கையின் 6 வது பிரிவை அமல்படுத்துவதற்கான உயர் மட்ட குழு ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், போடோ சமுதாயத்துடன் தொடர்புடைய மற்ற பிரச்சினைகள் மற்றும் 2003 ஆம் ஆண்டின் தீர்வுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

நவோதயா வித்யாலய மாணவர்கள் சிலர் தற்கொலை செயத்ததை விசாரிக்க அரசு குழுவை நியமித்தது

  • நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்ததை விசாரிக்க குழுவை நியமித்துள்ளதாக மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 தொழிற்சங்க சட்டம் 1926, சட்டதிருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது தொடர்பாக தொழிற்சங்க சட்டம் 1926, சட்டதிருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் மத்திய மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை எளிதாக்கும்.

பாராளுமன்றத்தில் RTE சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது

  • ராஜ்யசபா ஒப்புதல் அளித்ததன் காரணமாக குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி (சட்டதிருத்த) உரிமை மசோதா, 2018-ஐ பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • பள்ளிகளில் ‘வகுப்பு நிறுத்த கொள்கையை’ அகற்றுவதற்காக 2009 ஆம் ஆண்டுக்கான கல்வி உரிமைச் சட்டத்தை மேலும் திருத்திக்கொள்ள மசோதா நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றம் NCTE சட்டதிருத்தத்தை நிறைவேற்றியது

  • ராஜ்யசபா ஒப்புதல் அளித்ததன் காரணமாக ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (திருத்தம்) பில், 2018, பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • மக்களவை ஏற்கனவே அதை நிறைவேற்றியது. கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் ஆசிரியர் கல்வி படிப்புகள் நடத்திய மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தை வழங்க இந்த மசோதா வழிவகுக்கும்.

தேசிய தொழில் முனைவோர் விருதுகள் வழங்கி இளம் தொழில்முனைவோர் கவுரவிக்கப்படஉள்ளனர் 

  • புது தில்லியில் தேசிய தொழில் முனைவோர் விருதுகளின் மூன்றாவது பதிப்பை திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முயற்சி அமைச்சகம் நடத்த உள்ளது. இளம் முதல்-தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழலைக் கட்டமைப்பதில் மிகுந்த பங்களிப்பு செய்தவர்கள் போன்றவர்களை அங்கீகரித்து கௌரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 செயற்கைக் கோள்களை உருவாக்குவதற்கு 10,900 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு

  • அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு 10,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

பரோடா வங்கியுடன் விஜயா, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • விஜயா வங்கி, தேனா வங்கியை பரோடா வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத்திட்டம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டாக்ஸை வழங்குவதற்காக எண்ணெய் விற்பனை நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு

  • ஃபாஸ்டாக்ஸை எளிதாக கிடைக்க உறுதி செய்ய, 2019 ஜனவரி 7 ஆம் தேதி, இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ஊக்குவிக்கப்பட்ட ஒரு நிறுவனம், IOCL, BPC மற்றும் HPC ஆகிய எண்ணெய் விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. இது இந்தியா முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் ஃபாஸ்டாக்ஸ் கிடைக்கும் தன்மையை உறுதி செய்யும்.

டி.என். தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்ட மசோதா லோக் சபாவில் நிறைவேற்றம்

  • குற்றம் செய்தவர், பாதிக்கப்பட்டவர், காணாமல் போனோர் உள்ளிட்டோரை அடையாளம் காண, டி.என்.ஏ., எனப்படும், மரபணு சோதனை நடத்த அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.
  • இந்த மசோதா, டி.என்.ஏ., வங்கிகள் உருவாக்கவும், டி.என்.ஏ., சோதனைகள் செய்யும் பரிசோதனை கூடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் வகை செய்கிறது.குற்றவாளிகள், காணாமல் போனோரின் உறவினர்கள் தவிர, மற்றவர்களின், டி.என்.ஏ., மாதிரிகள், சம்பந்தப்பட்டோரின் அனுமதி பெறப்பட்டு, டி.என்.ஏ., வங்கிகளில் சேமிக்கப்படும்.

பொதுப்பிரிவில் உள்ள EWS க்கு 10% ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா

  • பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவுகளுக்கு (EWS) பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கும் ஒரு அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • 124வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, உயர்கல்வி நிறுவனங்களில் நேரடியாக ஆட்சேர்ப்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்புகளில் உயர் சாதியில் உள்ள EWS மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கிறது.

மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்பின் 124-வது சட்ட திருத்த மசோதா 2019 விவாதம்

  • பொதுப் பிரிவில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு[வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில்] வழங்க வகை செய்யும் இந்திய அரசியலமைப்பின் 124-வது சட்ட திருத்த மசோதா 2019ன் விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது

124 வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா ஜனாதிபதியிடம் சென்றது

  • ராஜ்ய சபா 124வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் 2019 ஐ நிறைவேற்றியது, இது பொதுப்பிரிவில் உள்ள ஏழைப் பொதுமக்களுக்கு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும்.

கட்டிடங்களில் மின்சக்தி செயல்திறனை ஊக்குவிக்க ஒப்பந்தம்

  • கட்டிடங்களில் மின்சக்தி செயல்திறனை ஊக்குவிக்க மின்சக்தி செயல்திறன் அமைப்பகம் மற்றும் CPWD கட்டிடங்களில் ஆற்றல் திறனை மேம்படுத்த ஒப்பந்தம்.
  • நாடு முழுவதும் CPWD நிர்வகிக்கப்பட்ட கட்டிடங்களின் ஆற்றல் வாய்ந்த வடிவமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய கட்டிடங்கள் மற்றும் நட்சத்திர மதிப்பீடு ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

முத்தலாக் அவசரச் சட்டத்தை மறு பிரகடனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

  • உடனடி முத்தலாக், குற்றவியல் குற்றம் என உறுதிசெய்யும் அவசரச் சட்டத்தை மறு பிரகடனம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசரச்சட்டம் உடனடி முத்தலாக் செல்லாது, சட்டவிரோதமானது என உறுதிப்படுத்துகிறது. இந்த குற்றத்தை புரிபவர்கள் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

மூன்று புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • நாட்டிலுள்ள சுகாதார வசதிகளை அதிகரிக்க மூன்று புதிய எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஜம்மு & காஷ்மீரில் இரண்டும், குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒன்றும் அமைக்கத் திட்டம்.

ரியல் எஸ்டேட் துறையில் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பிரச்சினையை சமாளிக்க அரசு குழு அமைப்பு

  • ஜி.எஸ்.டி யின் கீழ் ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்துவதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர் குழுவை (GOM) அரசாங்கம் அமைத்துள்ளது. குஜராத்தின் துணை முதலமைச்சர் நிதின் படேல் இந்தக்குழுவின் தலைவராக இருப்பார்.

இந்திய ஏற்றுமதிஇறக்குமதி வங்கி மறுமூலதனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியில் மறுமூலதனம் செய்வதற்கு வசதியாக, ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்திய அரசு மறுமூலதன பத்திரம் வெளியிடும். இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் மூலதனத்தை 10 ஆயிரம் கோடியிலிருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கு ஜனாதிபதி கோவிந்த் அங்கீகரித்தார்

  • நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

பொது பிரிவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு 10% இட ஒதுக்கீடு

  • பொது பிரிவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு 2019-20 கல்வியாண்டிலிருந்து 40,000 கல்லூரிகள் மற்றும் 900 பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு.

குஜராத் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கான 130 ஒப்பந்தங்களில் கையெழுத்து 

  • குஜராத் அரசு, மூன்று நாள் 9-வது துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் முதல் நாளில், பல்வேறு துறைகளில் 56,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடு செய்வதற்கான 130 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தேசிய அமர்வு (ஜிஎஸ்டிஏடி)

  • பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தேசிய அமர்வை (ஜிஎஸ்டிஏடி) உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தேசிய பெஞ்ச் புதுதில்லியில் அமைக்கப்படும். இதற்கு அதன் தலைவர் தலைமை தாங்குவார். மத்திய அரசிலிருந்து ஒரு தொழில்நுட்ப உறுப்பினரும், மாநில அரசிலிருந்து ஒரு தொழில்நுட்ப உறுப்பினரும் இதில் இடம்பெற்றிருப்பார்கள்.

ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக நிதி அமைச்சகம் ஒதுக்கீடு

  • ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருண் ஜெட்லியின் இயலாத காலப்பகுதியில் நிதி மந்திரி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் பதவியை தற்காலிகமாக கவனித்துக்கொள்ள பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடெங்கிலும் கைவிடப்பட்ட 400 விமானத்தளத்தை புதுப்பிக்க மத்திய அரசு திட்டம்

  • விமானப்போக்குவரத்தை வலுப்படுத்த நாடெங்கிலும் 400 கைவிடப்பட்ட விமானத்தளத்தைப் புதுப்பிக்க, வளர்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய விமானநிலைய ஆணையம் இந்த விஷயத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தயார் செய்து அந்தந்த மாநில அரசுகளுடன் சேர்ந்து அந்த விமான தளத்தை உருவாக்கும் என்றும் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கு இது குறித்த அறிவிப்பை அனுப்பியுள்ளதாகவும் தகவல்.

2019 பொதுத் தேர்தலில் ஆயிரக் கணக்கானவர்கள் முதல் தடவையாக வாக்களிக்க தகுதி

  • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இந்த ஆண்டு பொது தேர்தல்களில் ஆயிரக்கணக்கில் முதல் தடவை வாக்களிக்கும் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

நான்கு வழிச்சாலை கங்கை எக்ஸ்பிரஸ்வே கட்டுமானத்திற்கு உபி அரசு ஒப்புதல்

  • உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை, 36,000 கோடி ரூபாய் செலவில் பிரயாக்ராஜ் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தை இணைக்கும் நான்கு-வழிச்சாலை கங்கை எக்ஸ்பிரஸ்வே கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது.

அயோத்தி நிலப் பிரச்சினையை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் 5 உறுப்பினர்கள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வு அமைக்கப்பட்டது

  • அயோத்தியில் ராமர் ஜன்ம பூமி-பாபர் மசூதி நிலத்தின் வழக்கை விசாரிக்க புதிய ஐந்து நீதிபதி அமர்வு உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்டது.
  • நீதிபதி அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இந்தப் புதிய சட்ட அமர்வில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டி மற்றும் டி.யு. சந்திராசூட் இந்த அமர்வில் உள்ளனர்.

வேளாண் அமைச்சகம் & விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு & தொழில்முனைவோருக்கான அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • வேளாண் துறையில் திறமையை மேம்படுத்துவதற்காக வேளாண் அமைச்சகம் & விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு & தொழில்முனைவோருக்கான அமைச்சகம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹஜ் மீதான ஜிஎஸ்டி 18% முதல் 5% வரை குறைக்கப்பட்டது

  • ஹஜ் மீதான ஜி.எஸ்.டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். இதனால் இந்த வருடம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு விமான கட்டணத்தை கணிசமாகக் குறைத்து 113 கோடி ரூபாய்களை சேமிக்க உதவும்.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.7,214.03 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்

  • மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, கூடுதல் நிதியாக, ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ரூ.7214.03 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன்படி, புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசம், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், குஜராத் மாநிலம், கர்நாடக மாநிலம், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்டியது

  • வரவு செலவுத் திட்ட அமர்வு காலத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சுறுசுறுப்பான செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து கட்சிகளிடம் தங்கள் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அரசாங்கம் கூட்டியது.

ரயில்வேயின் 100% மின்மயமாக்குதலுக்கான லட்சிய திட்டம்

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே கிரிட்கள் 100 சதவீத மின்மயமாக்கலை உறுதி செய்வதற்கான ஒரு லட்சிய திட்டத்தை அரசாங்கம் துவக்கியுள்ளது.

சீர்திருத்த நடவடிக்கைகள்எளிதாக வளர்ச்சி விகிதங்களை குறைந்தது 1% அதிகரிக்கலாம்: EAC

  • பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசகர் கவுன்சில் [ இ.ஏ.சி-பிரதமர்] கூட்டம் புது தில்லியில் சந்தித்தது மற்றும் பொருளாதார நிலையை ஆராய்ந்தது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!