மாதம் ரூ.60,000/- ஊதியத்தில் வனத்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2021 !!
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மத்திய அரசு பணியிட அறிவிப்பில் Consultant பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணிக்குரிய பதிவு முகவரி மற்றும் ஏனைய தகவல்களை எங்கள் வலைப்பதிவில் வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | MOEF |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Consultant பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
- அரசின் அனுமதியுடன் செயலாற்றிக் கொண்டுள்ள கல்லூரிகளில் Environmental Science/Life Science அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் Master Degree பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
- M.S. Office செயல்பாடுகளில் நல்ல திறனுடன் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
![BANK](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/10/IMG-20201027-WA0004-300x300.jpg)
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.