தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று துவக்கம் – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!!

0
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று துவக்கம் - புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று துவக்கம் - புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று துவக்கம் – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!!

தமிழகத்தில் 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) துவங்குகிறது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களுக்கு இந்த கூட்டத்தில் பதவிப்பிரமாணம் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற பிறகு முக ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் புதிய அமைச்சரவைக்கான 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (மே 11) காலை துவங்குகிறது.

தமிழக அரசு ஊழியர்கள் சம்பள பிடித்தம் – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!!

இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். முன்னதாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையின் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட கு.பிச்சாண்டி அவர்களுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று (மே 10) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவையின் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பை தொடர்ந்து, சபாநாயகர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டி ஆகியோர் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!