தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் உத்தரவு!

0
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் உள்ள அலுவலர்கள் வரும் காலங்களில் உயர் மேடைகளில் அமராமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

அலுவலர்களுக்கு உத்தரவு

பொதுவாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் உயர்ந்த மேடை போன்ற இடங்களில் அமர்ந்து பணிகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இனி பதிவுத்துறை அலுவலக ஊழியர்கள் அனைவரும் இனி உயர்ந்த இடங்களில் இருந்து வேலை பார்க்க கூடாது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? அரசு பரிசீலனை!

அதாவது இனி வரும் நாட்களில் பதிவு அலுவலர்கள் அனைவரும் உயர்ந்த மேடையில் அமர்ந்து வேலை பார்க்காமல் மக்களுடன் சரி சமமாக இருந்து பதிவுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழகத்தில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்களில் கட்டணம் செலுத்தும் பணிகள் அனைத்தும் இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த பண அலுவல்களை இனி சார்பதிவாளர் கையாள வேண்டிய அவசியம் இல்லை. அதனால் பதிவு அலுவலர்கள், துறை அலுவலகங்களில் உயர்ந்த மேடைகளில் அமர வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், அவர்களின் இருக்கையை வழக்கமான அலுவலகங்களில் இருப்பதை போலவே சமதளத்தில் அமைத்து, சுற்றியுள்ள தடுப்புகளை நீக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here