‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – பாண்டிச்சேரி விசிட்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா - பாண்டிச்சேரி விசிட்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா - பாண்டிச்சேரி விசிட்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – பாண்டிச்சேரி விசிட்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஹேமா தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சீரியலில் இருந்து சிறிய பிரேக் எடுத்து பாண்டிச்சேரிக்கு ஒரு விசிட் செய்திருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி முக்கியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் விரைவில் 800 எபிசோடுகளை எட்ட இருக்கிறது. இத்தொடர் விஜய் டிவியில் சுமார் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்சமயம் இதன் கதைக்களம் குழந்தைகளை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது. இத்தொடரில் பல்வேறு கதாப்பாத்திரங்கள் இடம்பெற்று வந்தாலும் மக்களின் பேவரைட்களில் ஒன்று நடிகை ஹேமா நடித்து வரும் மீனா கதாப்பாத்திரம் தான்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் பரிசு குறித்து அரசு விளக்கம்!

ஏனென்றால் முழுமையான வில்லத்தனம் இல்லாமல் அவ்வப்போது நகைச்சுவையில் கலக்கி வரும் இந்த மீனா கதாப்பாத்திரம் தற்போதைய எபிசோடுகளில் அதிகளவு மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகை ஹேமா சீரியலில் இருந்து கிடைத்த ஒரு சிறிய பிரேக்கில் பாண்டிச்சேரிக்கு சென்று அங்கு வைத்து தனது விடுமுறையை உற்சாகமாக கழித்திருக்கிறார்.

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் இனி சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா? வெளியான ஷாக் ப்ரோமோ!

அதாவது புத்தாண்டு தின கொண்டாட்டத்திற்காக இம்முறை முதன் முறையாக தனது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ள நடிகை ஹேமா பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார். அந்த வகையில் கொண்டாட்டத்தின் முதல் கட்டமாக தான் தங்கி இருக்கும் பங்களாவை ஒரு வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களுக்கு சுற்றி காட்டி இருக்கிறார். பிறகு தன் மகனுக்காக கொண்டு வந்த கொண்டு வந்த பொருட்கள் என பல விஷயங்களை அந்த வீடியோவில் ரசிகர்களுடன் ஷேர் செய்திருக்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!