மார்ச் 19 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

அரசு விரைவு பேருந்துகள் நின்று செல்ல 50 புதிய நிறுத்தங்கள் ஏற்படுத்த முடிவு

  • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வசதியாக அரசு விரைவு பேருந்துகளுக்கு 50 புதிய நிறுத்தங்கள் விரைவில் தேர்வு செய்யப்படுகிறது.
  • இதில், சென்னையில் 7 புதிய நிறுத்தங்களும் இடம் பெறுகின்றன.

திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

  • திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் தீவிர முயற்சியால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • மேலும், உரக்கிடங்கில் காலியாக இருந்த 4 ஏக்கர் நிலத்தை தூய்மைப்படுத்தி பூசணி, முள்ளங்கி, பச்சை மிளகாய், அவரை, கத்தரி, தக்காளி ஆகிய காய்கறி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.
  • இந்த செடிகளுக்கு இங்கு தயாரான மண்புழு உரத்தையே இட்டுள்ளனர். இதில், நல்ல மகசூல் கிடைத்துள்ளது.

திமுக ஆய்வு கூட்டம் ஏப். 2-ல் மீண்டும் தொடக்கம்

  • சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக நிர்வாகிகளின் கள ஆய்வுக் கூட்டம், ஏப்ரல் 2-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிப் பணிகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.

இந்தியா

ராஜஸ்தான் போலீஸார் திட்டம்

  • குற்றவாளிகளை அடையாளம் காண ஆதார் தகவல்களைப் பயன்படுத்த ராஜஸ்தான் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

முதியோருக்கு எதிரான குற்றச்செயல்களில் 3-வது இடத்தில் தமிழ்நாடு

  • நாடு முழுவதும் முதியவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய 2 மாநிலங்கள் 40 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கின்றன.
  • தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது.

உலகம்

ரஷ்ய அதிபர் தேர்தல் முடிவு

  • ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அதிபர் புதின் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
  • அவர் வெற்றி பெற்று 4வது முறையாக அதிபராவது மீண்டும் உறுதியாகியுள்ளது.

உலகின் மிகச் சிறந்த ஆசிரியர்

  • இங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயது ஆண்ட்ரியா ஜஃபிராகவ் உலகின் மிகச் சிறந்த ஆசிரியர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.
  • இவருக்குச் சுமார் 6.5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது!

வணிகம்

பேட்டரி கார் உற்பத்தியை அதிகரிக்கிறது ஃபோக்ஸ்வேகன்

  • வாகன புகை வழக்கில் சிக்கி சர்வதேச அளவில் மிகுந்த நெருக்கடிக்கு ஆளான ஃபோக்ஸ்வேகன் குழுமம் பேட்டரி கார் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
  • உலகம் முழுவதும் தற்போது இந்நிறுவனத்துக்கு உள்ள ஆலைகளில் மூன்றில் மட்டுமே பேட்டரி வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
  • 16 ஆலைகளில் பேட்டரி வாகனங்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

6 கியர்களில் மாருதி ஸ்விப்ட்

  • 6 கியர்களைக் கொண்ட ஸ்விப்ட் உருவாக்கும் பணிகள் துரித கதியில் நடைபெறுகின்றன.
  • இது வாகனத்தின் செயல் திறனை மேலும் மேம்படுத்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இந்த ஆண்டில் (2018) இந்த வாகனம் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது.

மத்திய அரசு திட்டம்

  • வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இதனைத் தடுப்பதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • இதில் ஒரு நடவடிக்கையாக நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருக்கும் அனைவரது பாஸ்போர்ட் தகவல்களைச் சேகரிக்க மத்திய அரசு திட்டமிடுவதாக தெரிகிறது.

விளையாட்டு

பாட்மிண்டன் அரை இறுதியில் சிந்து தோல்வி

  • இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி கண்டார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!